சென்னை:

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் 9 பேர் பரிதாபமாக இறந்துள்ள நிலையில், பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசனிடம், காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக ரஜினி பதில் அளிக்க மறுக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கமல்,  “ரஜினிகாந்த் இந்த ஒரு விஷயத்தில் மட்டும்  அல்ல பல்வேறு விஷயங்களில் அப்படிதான் இருக்கிறார்,பதில் சொல்லாமல்  நழுவுகிறார் ” என்று விமர்சித்தார்.