காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, இன்று காலை உடல்நலக் குறைவால், காஞ்சி தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
ஜெயேந்திரரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள இரங்கல் டுவிட்டில், “ஜெயேந்திரர் மறைவு குறித்த செய்தி அறிந்து நான் வேதனை அடைந்தேன். அவரது போதனைகள் உலகெங்கும் உள்ள பக்தர்களால் மதிக்கப்படுகிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்” என கூறியுள்ளார்.
மறைந்த ஜெயேந்திரரின் உடல் நாளை காலை சங்கர மடத்தில் அடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.