சென்னை:
பராமரிப்பு பணி காரணமாக சென்னை புறநகர் ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரெயில்வே அறிவித்து உள்ளது.
அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி நடக்க இருப்பதால் இன்றும் நாளையும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு மதியம் 12.20, கும்மிடிப்பூண்டி யில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு காலை 11.20, மதியம் 2.40 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (இன்றும் நாளையும்) ரத்து செய்யப்படுகின்றன.
சென்ட்ரல் ரெயில் நிலையம் – கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.25, 11.35, மதியம் 1.25 மற்றும் சூலூர்பேட்டைக்கு மதியம் 12.40 மணி மின்சார ரெயில்களின் சேவை எண்ணூர் – கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் ரெயில் நிலையம் காலை 10.50 மதியம் 12.55, 1.35 மணி மின்சார ரெயில்களின் சேவை கும்மிடிப்பூண்டி – எண்ணூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
பயணிகளின் வசதிக்காக கும்மிடிப்பூண்டியில் இருந்து சூலூர்பேட்டைக்கு மதியம் 2 மணிக்கு பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.