சென்னை:

சென்னை அருகே குன்றத்தூரில் நடந்துசென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த  கொள்ளையன், செயினை பறித்து சென்றான். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் சமீபகாலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆங்காங்கே பெண்களை குறி வைத்து, அவர்களிடம் இருந்து செயின்களை அறுத்துச் செல்கின்றனர்.

கடந்த 10-ம் தேதி, சென்னை குன்றத்தூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, தனது கணவர் அசோக் குமாருடன் கடைக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த இளைஞர் ஜெயஸ்ரீயின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான்.

அதுபோல, அரும்பாக்கத்தில் நடந்த செயின் பறிப்புச் சம்பவத்தில்  நகையை விட்டுத்தராததால் பெண்ணைத் தர தரவென சாலையில் இழுத்துச்சென்ற கொடூரச் சம்பவம், பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி மேனகா, அரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, வள்ளுவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது,  கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றுவிட்டனர்.  இந்தச் சம்பவத்தில், மேனகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி புட்டேஜுடன் கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்து வந்தனர். இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அவனிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.