டில்லி

ந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி பாக் அம்பயர் அலீம் தார்  உணவு விடுதி துவங்கியதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அம்பயரான அலீம் தார் தனது அம்பயரிங்க் மூலம் உலகெங்கும் பெரும் புகழ் பெற்றுள்ளார்.   அவர் தற்போது உணவு விடுதி ஒன்றை ஆரம்பிக்க உள்ளார்.    மேலும் இந்த உணவு விடுதியின் வருமானம் மூலம் காது கேளாத மாணவர்களுக்கான பள்ளி ஒன்றை அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி வீடியோ மூலம் பாராட்டு மற்றும் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.

அவர் தனது செய்தியில், “ஹலோ அலீம் பாய்.   தாங்கள் புதிய உணவு விடுதி ஒன்றை தொடங்க உள்ளதாக அறிந்தேன்.   அதற்கு எனது பாராட்டுக்கள்.   தாங்கள் அம்பயராக புகழ் பெற்றது போல் இந்த துறையிலும் புகழ் பெற வாழ்த்துகிறேன்.

இந்த உணவு விடுதியின் வருமானம் மூலம் காது கேளாதோருக்கான பள்ளி துவங்க உள்ளதாகவும் அறிந்தேன்.  உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.   அனைவரும் இந்த உணவு விடுதிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”  என கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]