மேஷம்
நீங்க படிச்ச படிப்பினால் நலம் விளையும். படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும்.. பிஸினெஸ் செய்ப வங்களுக்கு அருமையான லாபம் கிடைக்கும். புத்தகம்…. நூல்.. கல்வி சம்பந்தமான வியாபாரங்களில் ஈடு பட்டவங்களுக்குப் பொற்காலம் என்றே சொல்லலாம்… எனில் மாணவர்களுக்குக் கேட்பானேன்? உங்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டு எப்போதையும்விட அதிகமாகக் கிடைப்பது மட்டுமில்லை.. மேடை ஏறிக் கைதட்டலும் பெற வாய்ப்புள்ளது. எனவே முழு உழைப்பைப்போட இதுதான் பெஸ்ட் நேரம். நினைவில் வெச்சுக்குங்க.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 10 வரை
ரிஷபம்
அம்மா பற்றிய டென்ஷன்களோ, அல்லது அம்மாவால் டென்ஷன்களோ இருந்தால் அவை வார மத்தியில் தீர்ந்துடும். பயப்படாதீங்க. அலுவலகம் பற்றிய கேள்வி ஒன்று இருந்ததில்லையா? அது பற்றிய சாதகமான பதில் ஒண்ணு காத்திருக்கு. தகவல் ஒன்று மெயிலில் வந்து வாவ் சொல்ல வைக்கும். வெளிநாடு சம்பந்த மான நல்ல செய்திகளுக்குக் காதைத் தீட்டிக்கொள்ளும்படி அப்பா கிட்ட சொல்லி வைங்க. திருமணம் அல்லது குழந்தைப்பேறு நடந்து குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அம்மாவுக்குப் புகழும் பாராட்டும் கூடும்.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 13 வரை
மிதுனம்
யாராலும் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. அப்படியே சின்ன அளவில் யாரும் ஏதும் டிரபுள் கொடுத்தாலும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுடுவாங்க. ஆனா அதுக்கு நேர் எதிரா நீங்க மத்த வங்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் எண்ணம் இருந்தால் அந்த எண்ணத்தைத் தூக்கிக் கடலில் வீசிடுங்க. இன்னிக்கு சிரிப்பு வரலாம். பின் விளைவை யோசிங்க. நல்ல் வேளையாய் மனசிலும் செயலிலும் நல்ல எண்ணங்கள் எழ வேண்டும் என்று இன்னொரு பக்க மனசு உங்களுக்கு அறிவுறுத்திக்கிட்டே இருக்கும். பிரார்த்தனைகள் ஈடேறும். குழந்தைங்க வாழ்வு முன்னேறும்.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை
கடகம்
குழந்தைங்க வாழ்க்கைல பெரிய நன்மையான திருப்பம் ஒண்ணு உண்டு. குழந்தைகளுக்கோ உங்க ளுக்கோ .. வேலை .. திருமணம் முதலான வாழ்க்கைத் திருப்புமுனை உண்டு. மம்மிக்கு வேலையில் சந்தோஷ சர்பிரைஸ் கிடைச்சுத் திக்குமுக்காடச் செய்யும். உங்களுக்கும் கவர்ச்சி அம்சம் செல்வாக்கு போன்றவை அதிகரிக்கும். அலுவலகத்தில் நல்லவங்களுக்கு நல்லவங்க என்றும் பொல்லாதவங்களுக்கு கெடுபிடியானவங்க என்றும் பெயர் எடுப்பீங்க. நல்லதுதானே? எந்தத்துறையில் இருந்தாலும் பாராட்டலும், கை தட்டலும், மேடை வெளிச்சமும் உண்டு.
சிம்மம்
சிம்மாசனம் காத்திருக்கு. உங்க கடுமையான உழைப்பும் விட்டுக்குடுக்காத தன்மையும் உங்களை மேலும் உயரத்துக்கு இட்டுச்செல்லும். வீண் ஆசாமிங்களின் தேவையற்ற வார்த்தைகளைக் கண்டுக்காதீங்க. உங்க தகுதி வேற, குடும்பத்தில் இருக்கும் கசமுசவையெல்லாம் உங்க கெடுபிடியும் கண்டிப்பும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரும். வெளிநாட்டிலிருந்து நீங்க எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேர சற்றே தாமதம் ஏற்பட்டால் உடனே டென்ஷன் ஆயிடாதீங்க. வரும். வரும். உரிய நேரத்தில் எல்லாம் தானாய் வரும். டோண்ட் வொர்ரி. அரசியல் ஈடுபாடு உள்ளவங்களுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு.
கன்னி
புது வேலை.. புது மனைவி அல்லது புதுக்குழந்தை காரணமாய் மனசில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைக ளுக்குத் திருமணம் நிச்சயமாகும். உள்நாட்டு வேலையோ.. வெளி நாட்டு வேலையோ.. ஏற்பதற்கு இதுதான் ஏற்ற நேரம். ஆனால், உத்யோகத்தில் உங்க திறமையை மட்டுமன்றி, உங்க நேர்மையையும் காட்டணும். காட்டிவீங்க. மனதிலும் வாக்கிலும் மென்மை இருப்பதால் ஜெயிச்சுடுவீங்க. சகோதர சகோதரிங்க புரிஞ்சுக்கலைன்னு டென்ஷன் வேண்டாம். பாவம் அவங்களே உங்க உதவி தேடி உங்களை நாடி வாசல்ல வந்து நிற்கப்போறாங்க. உதவுங்க. ப்ளீஸ்.
துலாம்
மனசில் சின்னச்சின்ன சலனங்களும்.. டென்ஷன்களும்.. உத்யோகக் குழப்பங்களும் இருந்தாலும் எல்லாமே சரியாகி ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியும் சந்தோஷமும் கொடுக்கும். அதுவரை மனசை அமைதியா வெச்சுக்க வேண்டியது உங்க பொறுப்பு. ஆமாம். சொல்லிட்டேன். மம்மிக்கு ஏற்பட்ட பிரச்சினை கள் முடிவுக்கு வரும். மேலும் அவங்களுக்குப் பெயரும் புகழும் அதிகரிக்கும். பாராட்டு கூடும். உத்யோ கத்துல உங்களுக்கு எந்த அளவுக்குப் பொறுப்பும் கெடுபிடியும் அதிகரிக்குதோ அந்த அளவுக்குப் பாராட்டும் வெற்றியும் சம்பளமும் அதிகரிக்கும். பதவி உயரும்.
விருச்சிகம்
பொறுப்பு காரணமா டென்ஷனோ.. டென்ஷன் காரணமா கோபமோ.. அதனால் சேதமோ ஏற்படாமல் பார்த்துக்குங்கப்பா. மாணவர்கள் ஜமாய்ப்பீங்க. நண்பர்களால் உங்களுக்கும், உங்களால் அவங்களுக்கும் நன்மையோ, லாபமோ, உதவியோ கிடைக்கும். எக்காரணம் கொண்டும் யாரிடமும் வாக்கு வாதமோ, சண்டையோ, சவாலோ, சபதமோ வேண்டாம். ஆரோக்யத்தை உங்க க்ரெடிட் கார்டைவிட பத்திரமாப் பார்த்துக்குங்க. வாகனத்துகிட்ட பய பக்தியோட இருங்க. அலட்சியமா ஓட்ட வேண்டாம். செலவுகள் அதிகம்தான்.. ஆனா கவலை தரும் செலவுகள் அல்ல.
தனுசு
குழந்தைங்க வெற்றி மாலை சூடி வந்து பெருமிதப்படுவாங்க.. பெருமிதப்படுத்துவாங்க. பேசிப்பேசியே வெற்றிகளைக் குவிப்பீங்க. காதல் திருமணம் குடும்பத்தில் ஒருவருக்குக் கைகூடும். அது உங்களுக்காக வும் இருக்கலாம். பிதுரார்ஜித சொத்து வரும். கேஸ் ஜெயிப்பீங்க. அப்பாவுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள உறவு நல்லபடியா இருக்கும். சமாதானமாகும். கவர்ச்சி அம்சம் அதிகமாகும். காதல் கைகூடும். கல்வித்துறையில் உள்ளவங்களுக்கு வருமானமும் புகழும் அதிகமாகும். ஆரோக்யமே பெரிய சொத்து. மறந்துடாதீங்க.
மகரம்
அரசாங்க விருது அல்லது பரிசு கிடைக்கும். அது வெளி நாட்டு அரசாங்கமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. மனைவி/ கணவருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்குங்க. உங்களுக்குப்புது வேலை கிடைசாலும்கூட, அவசியம் மாறணுமான்னு ஒரு முறைக்குப் பதினைஞ்சு முறை நல்லா திங்க் பண்ணிட்டு டிஸைட் பண்ணுங்க. கலைத்துறைல உள்ளவங்களுக்குப் பொற்காலம் என்றே சொல்லலாம். வாகனம் கொஞ்சம் செலவு வைக்கும். மறுக்காம அதைச்செய்துடுங்க. மிக மிக திடீர் லாபம் வரும். மிக மிக ரெடியா இருங்க.
கும்பம்
செலவு இவ்ளோ வருதேன்னு பயம் வரும்தான்.. நியாயம்தாங்க. ஆனாலும் எல்லாமே அத்தியாவசிய செலவுகள்தானே. மேலும் இதில் பாதி இன்வெஸ்ட்மெண்ட் அல்லவா? எனவே மனசைத் தேத்திக்குங் கன்னு தான் சொல்ல வரேன். ஏகப்பட்ட சினேகிதர்கள் பல்வேறு காரணங்களுக்காக உங்களை அணுகு வாங்க. நல்லவங்களா கெட்டவங்களா என்று யோசிப்பதுபோலவே நல்ல காரணமா உங்களை சிக்கலில் மாட்ட வைக்கும் காரணமான்னு யோசிச்சு, பிறகு உதவிக் கரத்தை தாராளமா நீட்டுங்க. பணவரவு சூப்பரா இருக்கும்.
மீனம்
ஒரு பக்கம் ஏராளமா வரும்படி வரும். மறு புறம் செலவு மட்டுப்படும். ஆக டபுள் ஜாக்பாட்தான். குழந்தை கள் உங்களுக்காக செலவு செய்தாலும் அதில் முணு முணுப்போ புகைச்சலோ இருக்காது. வேலை மாறுவது பற்றி இப்ப யோசிக்க வேணாமே. எங்கே போனாலும் இதே நிலைதான் இருக்கும். சகோதர சகோதரிகளுக்கு முடிஞ்ச வரை நல்லது செய்வீங்க. நல்ல பெயரும் கிடைக்கும். சில காரணங்களால் நண்பர்கள் கிட்டேயிருந்து ஒதுங்கியிருக்கும்படி நேரலாம். டோண்ட் வொர்ரி. நியாயமான காரணம்தான். வெளிநாட்டிலிருந்து வருமானமும் நல்ல செய்திகளும் வரும்.