
சென்னை,
பக்கோடா விற்பது தவறல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்து பேசும்போது, “இந்த தொ.கா. அலுவலகத்துக்கு வெளிய பக்கோடா விற்றாலே தினமு ரூ. 200 சம்பாதிக்கலாம்” என்றார்.
பிரதமர் மோடியின் பேச்சு இளைஞர்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தின. “படித்த படிப்புக்கு உரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமல், பக்கோடா விற்கச் சொல்வது நியாயமா” என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினார்கள். சமூகவலைதளங்களிலும் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே பெங்களூருவில் மோடியின் கூட்டம் நடந்த இடத்துக்கு அருகில் பட்டதாரிகளுக்கான உடையை அணிந்து பக்கோடா விற்கும் போராட்டத்தை இளைஞர்கள் நடத்தினர். தவிர நாடு முழுதும் பாஜக அலுவலகங்கள் முன்பு இளைஞர்கள் பக்கோடா விற்கும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மோடியின் பேச்சுக்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அதரவு அளித்துள்ளார்.
இது குறித்து அவர், “பக்கோடா விற்பது தவறல்ல. சுய வேலை வாய்ப்பு என்பது சிறந்த விசயம். பக்கோடா விற்பது போலவே காளான் மற்றும் அலங்கார மீன்களை உற்பத்தி செய்து விற்கலாம்” என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார். இவரது பேச்சும் சமூகவலைதளங்களில் பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. பலரும் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள்.
[youtube-feed feed=1]