விஷால் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் இரும்புத்திரை. இவருடன் உடன் சமந்தா, அர்ஜூன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது இதில் பேசிய விஷால், ” என்னுடைய தந்தை போல் எனக்கும் ராணுவ அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை.
இந்தப் படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளதை அடுத்து ஓரளவு திருப்தி அடைந்திருக்கிறன்.
இரும்புத்திரை மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம். அதை இந்திய இராணுவத்தோடு தொடர்புபடுத்தி எழுதி இயக்கியுள்ளார் மித்ரன்” என்று விஷால் பேசினார்.
இதையடுத்து, இந்தத் திரைப்படம், ராணுவ ஊழல் குறித்து பேசும் படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய விஷால், “என்னை பொறுத்தமட்டில் அரசியல் என்பது சமூக சேவைதான். அந்தவகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன். அரசியல்வாதி என்பவர் மக்களுடன் இருக்க வேண்டும், நான் அப்படி இருக்கவே விரும்புகிறேன். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகள் தான். நானும் அரசியல்வாதிதான்” என்றார் விஷால்.