காஞ்சிபுரம்,
ஜெயலலிதாவிற்கு ஸ்டிராய்டு மருந்து அளவுக்கு அதிகமாக சசிகலா குடும்பத்தினர் கொடுத்ததால் அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தது என்று சசிகலா குடும்பத்தினர் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம் சாட்டி உள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். 101வது பிறந்த நாள் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொன்னையன் பேசியதாவது,
ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் ஸ்டீராய்டு எனும் விஷத்தை சசிகலா குடும்பம் கொடுத்து வந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு சர்க்கரை அளவு அதிகரிந்து வந்ததாகவும், தொடர்ந்து 8 மாதங்களாக ஜெயலலிதா வுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது உடம்பில் சர்க்கரையின் அளவு எகிறியுள்ளது என்று கூறினார்.
இந்த ஸ்டீராய்டு மருந்தை தொடர்ந்து உட்கொள்ள கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சசிகலா குடும்பத்தினர் வேண்டுமென்றே இதை தொடர்ந்து கொடுத்து ஜெயலலிதாவை தீர்த்து கட்டிவிட்டனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டுகள் வழங்கப்பட்டது குறித்து, ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் என்றும், டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று திவாகரன் கூறியதன் மூலம் உண்மைகள் தற்போது வெளிவரத் தொடங்கி உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.