சென்னை,

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஐடிஐ படித்து வரும் கல்லூரி மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லயோலா கல்லூரியிலிருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் சாலையில் இளைஞர் ஒருவர் வெட்டுக் காயங்களு டன் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் கொலை செய்யப்பட்டவர், கிண்டி தொழில்நுட்ப கல்லூரியில் ஐடிஐ படித்து வந்த ரஞ்சித் என்பது தெரிய வந்தது. இவரும் தே பகுதியில் உள்ள அபுதெருவில் வசித்து வருகிறார்.

இதுகுறித்து அந்த பகுதியில் விசாரணை நடத்தியபோது, ரஞ்சித்தை மர்ம நபர்கள் சிலர், லயோலா கல்லூரிக்கு எதிரே உள்ள குளக்கரையில் இருந்து விரட்டிச்சென்று  ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டதாகவும் தெரிய வந்தது.

மாணவர் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த கொலைக்கு காதல் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.