சென்னை

மிழக அரசு நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை அறிவித்துள்ளது.

நெல் கொள்முதலுக்கான நிலையங்கள் திறப்பு மற்றும் விலை குறைத்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.  அதன்படி சென்னை, நீலகிரி மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள மாவட்டங்களில் நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட உள்ளன.  மொத்தம் 1564 மையங்கள் திறக்கப்பட்டு 20 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையும் அறிவிக்கப் பட்டுள்ளது.   சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1590 எனவும் பொது ரகம் குவிண்டாலுக்கு ரூ.1550 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இது தவிர விவசாயிகளுக்கு அரசு ஊக்கத் தொகை அளித்து வருகிறது.   அதையும் சேர்த்து சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 1660 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   தற்போது நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.