சென்னை,
கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீசார் மீது கொள்ளையர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சென்னை மதுரவாயல் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க சென்ற தமிழக போலீசாருக்கு ராஜஸ்தான் மாநில போலீசார் ஒத்துழைக்க மறுத்ததாகவும், அதன் காரணமாகவே தமிழக போலீசார்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், தமிழக போலீஸ் மீதான தாக்குதல் குறித்து ராஜஸ்தானில் உள்ள ராம்புரா காவல் நிலையத்தில் சென்னை போலீசார் புகார் கூறி உள்ளனர்.
இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ராஜஸ்தான் போலீசார் கூறி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.