மேஷம்

ஆஹா.. நியாயத்துக்காக ஏற்கனவே கோபக்காரர். இப்ப நியாயமான  காரணங்கள் வேற கிடைச்சாச்சு. இப்பதான் நீங்க பொறுமையா இருந்து உங்களை நிரூபிக்க வேண்டிய சமயம். எனவே நூல்மேல் நடப்பது போல் கவனமாய்க் காலை எடுத்துவைக்கணும். பேசவே பேச வேண்டாம்.  எல்லா நன்மைகளும் மின்னல் ஸ்பீடில் உங்களை வந்தடையும்.  என்றைக்கோ போட்ட விதைகள் இன்றைக்கு மரமாகிக் கனி தரும். அலுவலகத்தில் கொஞ்சமும் எதிர்பார்க்காத நன்மை ஒன்று  வாரக் கடைசியில் கிடைக்குங்க.  புகழும் பெருமையும் தன்னிச்சையா வரும்.

ரிஷபம்

அலுவலகத்தில் மிகவும் நிறைய வேலை இருக்கும். சரியா முடியுங்க. பாராட்டும் உண்டு. சிஸ்டர்ஸ் பிரதர்ஸ்கெல்லாம் நல்லது ஏற்படும். அதுக்கு நீங்கதான் காரணமா இருப்பீங்க. பாராட்டுகள். இத்தனை காலம் தாலாட்டுப் பாட வாய்ப்பில்லாமல் ஏங்கிக்கிட்டிருந்தவங்க மருத்துவ உதவியாலோ இயற்கையின் உதவியாலோ அம்மாவாகப்போறீங்க. செலவுகள் கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். கொஞ்சம் இழுத்துப்பிடிக்க முயன்றாலும் சகாத்தியமில்லாமல்தான் இருக்கும். எனினும் உங்களாலா முடியாது?

மிதுனம்

குழந்தைங்களால் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருமிதமும் உண்டு. உச்சி முகர்ந்து பாராட்டுவீங்க. திருமணம் நிச்சயமாகும். உயரிய சிந்தனைகள் மனசில் வந்து உட்காரும், தெய்வக் காரியங்களுக்காகப் பயணங்கள்  போவீங்க. பல நாட்கள் போக நினைச்ச பிரார்த்தனைகள்.. கோயில் விசிட்கள் இனிதே நிறைவேறும். திடீர் லக்  உங்களை சந்தோஷக்குளத்தில் தள்ளித் திக்குமுக்காடச் செய்யும். நீங்க குழந்தைங்களை சந்தோஷப்படுத்தறது பெரி விஷயமில்லைங்க.. அவங்க உங்களைப் பெருமிதப்படுத்துவாங்க பாருங்களேன்.                                                                                                               

கடகம்

பெரும் பொறுப்பு சுமந்திருக்கீங்க. நாலு விஷயங்களையும் கவனிக்க வேண்டி வரும். குடும்பத்தில் கோப தாபங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை நீங்க ஜெயிச்சு நிமிர்ந்துடுவீங்க. உங்க பெருந்தன்மை அதைச் செய்துடுமே. கல்யாணத்துக்காகக் காத்திருக்கறவங்களுக்கு இனி சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும். உடைகளும் நகைகளும் வாங்குவீங்க. டாடியால் உங்களுக்கும் உங்களால் அவருக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.        

சிம்மம்

சின்னச்சின்ன எதிரிகள் முதற்கொண்டு மெகா  எனிமீஸ்  வரை காலில் வந்து விழுவாங்க. அலுவலகத்தில் எதிர்பாலி னத்தினரின் உதவி கிடைப்பதால் ஜெயித்து நிமிர்ந்து பாராட்டுப் பெறுவீங்க. கணவருக்கு ஏகப்பட்ட முன்னேற்றம்ஸ், எனவே குடும்பத்தில் உத்தரவாதமாகக் குதூகலம் நுழையும். பேச்சில் நிறைய புத்திசாலித்தனம் இருந்தாலும் பேச வேண்டிய இடத்தில் பேசாமலும் பேச வேண்டாத நேரத்தில் பேசியும் தவறு செய்ய வாய்ப்பிருக்கு. ஜாக்கிரதைங்க. ப்ளீஸ்.

கன்னி

பேச்சினால் நன்மை உண்டாகும், குடும்பத்தில் புது வரவு சந்தோஷத்தை வாரி வழங்கும். குணங்களின் கூட்டுக்கலவையாய் இருப்பீங்க. ஒரு நேரம் இருந்த மாத்தி ஒரு நேரம்  இருக்க மாட்டீங்க. இதனால் நிலையற்ற மேடம்னு பெயர் வர வேண்டாமே, யோசிங்க.  செலவுகள் ஏகப்பட்டது வந்தாலும் வருமானம் அதற்கு மேல் வரும் என்பதால் பொருட்படுத்தும்படி இருக்காது. உங்க மேல பழி ஏதும் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்க பொறுப்பு. சொல்லிட்டேன். கெட்ட பழக்கத்துக்கு அடிமையாக வேண்டாம்.

துலாம்

சின்னச் சின்னதாய் அலுவலகத்தில் வரும் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு தலையைப் பிச்சுக்காதீங்க. நாளைக்கே சரியாகும்.  உங்க குடும்பத்தில் ஏற்படும் ஒற்றுமையால் வெளி நபர்களுக்கு ஏமாற்றமும் பயமும் வரும். வெளிநாட்டிலிருந்து டாலர்களும் .. பவுண்ட்டுகளும்.. திர்ஹாம்களும் வரும். புகழும் பெருமையும் எதிர்பாராமல் உங்களை வந்தடைஞ்சு திக்குமுக்காடச்செய்யும். உங்கள் அடக்கமான குணத்தால்  மற்றவர்களைக் கவரவும்  செய்வீங்க. விருந்து .. உறவினர் … நண்பர்கள் .. கெட் டு கெதர் என்று இனிதே பொழுது ஓடும்.

­

விருச்சிகம்

புது பிசினஸ் லாபம் தரும், அலுவலகத்தில் அழைத்துப் பாராட்டி சம்பளத்தை உயர்த்துவாங்க.  மம்மி பல காலமாய்க் காத்திருந்த நன்மைகள் அரியர் சந்தோஷங்கள் வந்து சேரும். பணம் நகை என்று வாங்குவாங்க. உங்களுக்கும்தான். மாணவிகளுக்கு நல்லாப் படிப்பு வரும். உங்க குழந்தைங்களுக்கு நல்லாப் படிப்பு வரும். அவங்க உங்களைப் பெருமிதப்படுத்துவாங்க. கணவன் மனைவி நல்லகாரியத்துக்காகப் பிரய நேரும், உதாரணம் ஆன்சைட். ஏராளமான செலவுகள் சந்தோஷமான மனநிலையைத் தரும்

தனுசு

பெரிய பயணங்கள் உண்டு. பணி இடம் மாற்ற வேண்டி வரலாம். எந்தப் பெரிய முடிவையும் யோசித்து எடுங்க. நல்லவங்க ஆலோசனை கேளுங்க. டாடிக்கு நன்மைகள் நடக்கும். அதிருஷ்டம் அடிக்கும். உங்களுக்கும் லக் உண்டு. குடும்பத்தில் புதிதாய் ஒரு நபர் கூடுதலாவாங்க. அது திருமணத்தினாலும் இருக்கலாம். பிரசவத்தினாலும் இருக்கலாம். வங்கியில் வைத்த தொகை குட்டி போட்டுப் பெருகும். உங்கள் வாக்கினால் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அலுவலகத்துக்கும் நன்மைகள் உண்டாகும். பாராட்டுக் கிடைக்குமே. ஜாலிதான்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை  

மகரம்

குழந்தைகள் வாழ்க்கை செட்டில் ஆகும், அவங்களைப் பற்றி நீங்க கொண்டிருந்த கவலைகள் தீரும்.  ஹாப்பி ஃபேமிலின்னு அக்கம் பக்கம் மெச்சவோ பொறாமைப்படவோ செய்யுமளவு சந்தோஷம் நிரம்பி வழியும். அம்மா வழியில் வர வேண்டிய நன்மைகளும் லாபங்களும் உங்களைத் தேடிக்கிட்டு வந்து சேரும். குழந்தைங்க மேடையேறிப் பாராட்டும் புகழும் பெறுவாங்க. உங்களுக்கு அதனால் பெருமிதமும் கர்வமும் வரும். வேலை மாற அவசரம் வேண்டாம். பொறுமையா இருங்க, நல்ல சான்ஸ் வரும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 11 முதல் நவம்பர் 13 வரை 

கும்பம்

பெரிய திட்டங்கள் பல காலம் நிறைவேறாமல் நின்னுக்கிட்டிருந்தது அல்லவா.. அவை அநாயாசமாய் நிறைவேறும். வேலையில் நல்ல புகழும் பாராட்டும் மகிழ்ச்சியும் அவார்டும் ரிவார்டும் கிடைக்கும். மற்ற வேலையில் இருந்தால் உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்களுக்குக் கற்பிக்க வேண்டி வரும், அதிலும் ஜமாய்ப்பீங்க. நீங்க மாணவராய் இருந்தால் ஆசிரியர் பாராட்டுப் பூரணமாய்க் கிடைக்கும். அம்மாக்கும் உங்களுக்கும் நல்லுறவு இருக்கும்படி பார்த்துக்குங்க. குடும்பம் ஹாப்பியா இருக்கும்..

சந்திராஷ்டமம்: நவம்பர் 13 முதல் நவம்பர் 16 வரை 

மீனம்

எடுத்த காரியம் யாவினும் வெற்றி. ஆனால் அது நல்ல உழைப்பின் பலன்தான். கூடவே பிரமாதமான அதிருஷ்ட காலம் நடக்குது. தன்னிச்சையா நன்மைகளும் அதிருஷ்டமும் உங்களைத் தேடி வந்து உங்க முன்னால் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக்கும். மிக திடீர்னு அதிருஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ரொம்பவும் உதவிகரமா இருப்பாங்க. அலுவலகத்தில் எதிர்பாலினத்தினராலும் உங்கள் சின்சியர் உழைப்பாலும் முன்னேற்றம் உண்டு.