நெல்லை,
அம்பாசமுத்திரம் அருகே சோழவந்தான் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற 4 பேரை பிடிக்க முயன்ற போது திருடர்கள் தாக்கியதில் காவலர் காயம் அடைந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருடர்கள் தாக்கியதால் காயமடைந்த காவலர் ராமன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் 5வது வார்டு சோலைபுரம் பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருபவர் முபாரக்கனி. இவர் உறவினர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மதுரை சென்றுவிட்டார்.
வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த திருடர்கள் 4 பேர் கொண்ட கும்பல் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தனர்.
அந்த பகுதியில் ரோந்து வந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர், வீட்டை உடைத்து திருடர்கள் செல்வதை கண்டு, வீட்டை சுற்றி வளைத்தனர்.
அதையறிந்த திருடர்கள் தப்பு முயற்சித்து அரிவாளால் வெட்டினர். இதில் ஏட்டு ராமர் என்பவர்மீது வெட்டு விழுந்தது. அவர் திருப்பி தாக்கியதில் திருடர்களில் ஒருவரும் காயமடைந்தார். மற்றவர்கள் தப்பி ஓட முயற்சித்தபோது 2பேர் பிடிபட்டனர்.
காயமடைந்த திருடன் மற்றும் காவலர் ஆகிய இருவரும் அம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில் திருட்டு வேளையில் ஈடுபட்ட கைதான நபர்கள் கல்லூரிமாணவர்கள் என்றும், அவர்கள் மதுரை அருகே உள்ள தேக்கடி, கம்பம், மாஞ்சோலை நாலு முக்கு, கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.
இவர்கள் அனைவ்ரும் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பொன்மாநகர் காலனியில் குகன் என்பவர் வீட்டில் தங்கி படித்துக்கொண்டே திருட்டுத்தொழிலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறி உள்ளனர்.