சென்னை,
நடிகர் கமலஹாசன் இந்து தீவிரவாதம் என்று பேசியதற்கு பாஜகவினர், சிவசேனா, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்து தீவிரவாம் என நடிகர் கமலஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி உத்தரப்பிரதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்து தீவிரவாதத்தை நடிகர் கமல்ஹாசன் விமர்சித்ததற்கு, நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்து மகாசபா தலைவர்கள் நடிகர் கமலஹாசனை சுட்டுக்கொல்லுங்கள் என்று பேசி வருகின்றனர்.
இந்நிலையில், கமலின் இந்த தீவிரவாதம் என்ற பேச்சுக்கு, காமெடி நடிகரும், பாஜக உறுப்பினருமான நடிகர் எஸ்.வி.சேகர், தனது டுவிட்டர் பக்கத்தில், காசிக்குப் போய் கங்கையில் மூழ்கி வர இரு ஒரு நல்ல சந்தர்ப்பம், வாரணாசி ஹோட்டல் ரூம்ல வர தண்ணீகூட கங்கைநீர்தான் என்று பதிவிட்டுள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.