
கடலூர்,
தமிழக பாஜ தலைவர் தமிழிசை குறித்து ஆபாச கார்டூன் வெளியிட்டதாக கடலூர் கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் பால.புதியவன் கைது கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் கடலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக தமிழக பாரதிய ஜனதா கட்சியினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும் இடையே அரசியல் ரீதியிலான எதிர்ப்பு அதிகமாகி வருகிறது.
நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் உள்ள மத்திய அரசுக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் என பாரதியஜனதாவினர் மிரட்டியிருந்தனர்.
இதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்நிலையில் விடுதலை சிறுத்ததைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனும் பாஜக குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
மெர்சல் திரைப்படத்துக்கு தேவையில்லாத விமர்சனம் மூலம் பா.ஜ.க. கூடுதல் விளம்பரத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. விஜய்யை தன் பக்கம் இழுக்க பாஜக முயற்சிக்கிறது. அவரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் அக்கட்சி விரும்புகிறது” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள பாரதியஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,
“விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவனுக்குத்தான் மிரட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்து இடங்களை வளைக்கும் குணம் உண்டு. அவரது கட்சித் தலைமையகம் இருக்கும் இடம்கூட அப்படி மிரட்டி வளைக்கப்பட்டதுதான். அதுபோல பாஜக கட்சியையைும் அவர் நினைத்துவிட்டார் போலும். ஆனால் அப்படி எவரையும் மிரட்டி வளைக்க வேண்டிய கட்டாயம் எங்கள் கட்சிக்கு இல்லை” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இரு கட்சிகளுக்கு இடையேயும் மோதல் போக்கு அதிகமானது.
இதன் காரணமாக தனக்கு ஆபாச போன்கள் தொடர்ந்து வருவதாக தமிழிசை குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தன்னை பற்றி ஆபாசமாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வதாகவும் புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த புதியவன் தமிழிசை குறித்து சமூக வலைதளத்தில் கார்டூன் வெளியிட்டதாக பாஜக எஸ்.சி., எஸ்.டி.பிரிவு போலீசில் புகார் கூறியது.
இதையடுத்து கடலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த செய்தி தொடர்பாளர் பால புதியவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி அவரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் அவரை விடுதலைசெய்யக்கோரிதொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடலூரில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் தற்போது தனக்கு ஆபாச போன்கள் வருவது நின்றுவிட்டதாகவும் தற்போது போன்களை ரிசிவ் செய்வதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]