டாக்கா,
இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
தொடர்ந்து 3வது முறையாக ஆசிய கோப்பையை இந்திய வென்று சாதனை படைத்துள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்கா 10-வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது. 8அணிகள் கலந்துகொண்டு ஆடிய இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. ஆக்ரோஷமாக ஆடிய இந்திய அணியினர் 4-க்கு 0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
அதைத்தொடர்ந்த இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மலேசிய அணியுடன் இந்திய அணி மோதியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணியினரும் தங்களது பலப்பரீட்சையை காட்டி துடிப்பாக விளையாடினர். ‘
‘இந்த ஆட்டத்தில் 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி இந்தியா 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இந்த போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் அவார்டு இந்திய வீரர் அகாஷ்தீப் சிங்குக்கு கிடைத்து.
இந்திய அணி ஏற்கனவே 2003 மற்றும் 2007 ம் ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது. தற்போது மூன்றாவது முறையாகவும் கோப்பை தட்டிச்சென்றுள்ளது.
ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.