டில்லி

ஜி எஸ் டி மாத ரிடர்ன் செய்யும் படிவம் இணையதளத்தில் இன்னும் வெளியாகததால் கடைசி தேதி ஆகஸ்ட் 28 ஆக மாற்றப்பட்டுள்ளது.

ஜி எஸ் டி சட்டப்படி விற்பனையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் வரவு செலவுக் கணக்கை (ரிடர்ன்) பதிவு செய்ய வேண்டும்.   அதன்படி ஜி எஸ் டி அமுலாக்கப்ப்பட்ட முதல் மாதமான ஜூலை மாத கணக்கை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கடைசி தேதி குறிப்பிடப்பட்டிருந்தது,

ஜி எஸ் டி இணையத்தில் அந்த ரிடர்ன் படிவம் இன்னும் வெளியாகவில்லை.  அதனால் வியாபாரிகள் தங்களின் கணக்கை பதிவு செய்வது கடினம் என கருத்து தெரிவித்துள்ளனர்.   வரும் 21ஆம் தேதி முதல் படிவம் இணைய தளத்தில் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.   எனவே முதல் ரிடர்ன் பதிவதற்கான கடைசி தேதியாக ஆகஸ்ட் 28ஆம் தேதி என அரசு அறிவித்துள்ளது.

 

[youtube-feed feed=1]