சென்னை,

மிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவர் தலைமை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு எதுவும் உண்மைஇல்லை என்றும், அதற்கு ஆதாரமும் கிடையாது என்று கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து .  அவருக்கு தமிழக அரசு தொழிற்முனைவோர் மேம்பாட்டு திட்ட இயக்குநராக பதவி வழங்கி மீண்டும் பணியில் அமர்த்தியது.

இந்நிலையில், ராமமோகன்ராவ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையை சேர்ந்த அறப்போர் இயக்கத்தினர், ராமமோகன் ராவ் செய்த முறைகேடு குறித்த ஆதாரங்களை வெளியிட்டு உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதில் நடைபெற்ற ஒப்பந்தத்தில்,முறைகேடு செய்துள்ளதற்கான ஆதராங்களையும் வீடியோ  காட்சிகளையும் வெளியிட்டு உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான டெண்டரில் முறைகேடு நடப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு,  பத்மாவதி  ஹாஸ்பிடாலட்டி  நிறுவனத்துக்கு  (Padmavathi Hospitality And Facility Management Services), சுமார் 360 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்தில் ராமமோகன்ராவின் மகன் விவேக் பங்குதாரராக உள்ள பாஸ்கர் கனுமுரியின் நிறுவனம் ஆகும்.

அந்த நிறுவனத்துக்கு டெண்டரை வழங்க ராம மோகன ராவ் தனது செல்வாக்கைப் பயன்படுத்திய தாகக் குற்றச்சாட்டு எழுந்தது. டெண்டருக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், அந்நிறுவனத்துக்கு டெண்டரை ஒதுக்க முறைகேடு நடந்துள்ளது.

இதுகுறித்து, அறப்போர் இயக்கம் கடந்த  ஐனவரி மாதம்  சி.பி.ஐ-யிடம்  புகார் அளித்திருந்தது. புகாருக்கான ஆதாரங்களையும் அப்போது  வழங்கியிருந்தது.

அதில், அரசின் (1802/TNMSC/ENGG/2016  dt.08.01.2016) என தேதியிட்ட டெண்டர் பிரிவில் போட்டியிடும் நிறுவனங்களுக்கு அடிப்படைத் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அவற்றில், இந்திய நிறுவனங்கள் சட்டத்தின் (Indian Companies act -1956 ) கீழ் டெண்டரில் பங்குபெறும் நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்குள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த விதிகளையெல்லாம் மீறி பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி  நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று புகாரில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த டெண்டர் விவகாரத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பற்றி விரிவான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

மேலும், பத்மாவாதி நிறுவன  டெண்டர் மூலம் எடுக்கப்பட்ட ஊழியர்கள் அரசு மருத்துவ மனையில் செய்யும் முறைகேடுகள் அடங்கிய வீடியோவையும்   வெளியிட்டுள்ளது .

”குறைந்தபட்சம் ஓர் அரசு மருத்துவமனையில், 200  துப்பரவுப் பணியாளர்கள்  இருக்க வேண்டும். ஆனால் பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம்,  50 ஊழியர்களை வேலைக்கு அனுப்பிவிட்டு… 200  ஊழியர்களாகக் கணக்குக் காட்டுகிறது”

‘அந்த நிறுவனம் அதிகமான  ஊழியர்களைக் கணக்குக் காட்டுவதற்காக இடது கை, வலது கை என மாறிமாறிக் கையெழுத்திடும் தொடர்பான வீடியோவை நாங்கள் வெளியிட்டுள்ளோம்”  என கூறியுள்ளார்  அறப்போர் இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்  வெங்டேஷ்.

மேலும்,  பத்மாவதி நிறுவனத்துக்கு டெண்டர்  வழங்குவதற்காகத் தேதிகளையும் அதன் விதி முறைகளையும்  மாற்றியுள்ளனர்

டெண்டருக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக 28.1.2016  என்று முடிவு செய்யப்பட்டதை 5.2.2016 என்று நீட்டித்துள்ளது.  பின்னர், ராம மோகன ராவும்  தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த அபூர்வா ஐஏஎஸ் ஆகியோரி  இணைந்து டெண்டரின் கடைசி நாளுக்கு முன்னதாக, அதாவது 4.2.2016  அன்று,டெண்டரின் கடைசித் தேதியை 16.02.2016 என மாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.  அதற்கான  ஆவணங்களையும் வெளியிட்டுள்ளோம்.

மேலும், டெண்டரில் பங்குபெறும் நிறுவனங்களின் தகுதிகளையும் மாற்றி,பிரப்ரைட்டிரி ஷிப் மற்றும் பார்ட்னர்ஷிப் நிறுவனங்களும் பங்குபெறும் வகையில் மாற்றியிருப்பதும் அம்பலமாகி யுள்ளது. இது தொடர்பான அனைத்து ஆதராங்களையும்  வீடியோ காட்சிகளையும் தமிழக  ஊழல் தடுப்பு  கண்காணிப்பு இயக்கத்துக்குக் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாகவே வழங்கினோம். ஆனால், அது தொடர்பாக  அந்தத் துறை  அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அப்பட்டமாக  ஊழல் நடந்துள்ளதற்கான ஆதராங்கள் ‘மற்றும்  வீடியோக்களைக்  கொடுத்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் உள்ள அந்தத் துறை தமிழகத்தில் எதற்கு”?

இதுதொடர்பாகச் சுகாதாரத் துறைச் செயலாளரைச் சந்தித்துப் புகார் தெரிவிக்க உள்ளோம். மேலும், தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம்” என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.