டில்லி:

தேவையற்ற மொபைல் அழைப்புகளை விடுப்பதில் உலக அளவில் இந்தியர்கள் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

‛ஸ்பேம் கால்’ எனப்படும் தேவையற்ற அழைப்புகளை விடுப்பது குறித்து உலகலாவிய அளவில் ட்ரூகாலர் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் முதலிடம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

அடுத்த இரு இடங்களை முறையே அமெரிக்காவும், பிரேசிலும் பிடித்துள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களே 54 சதவீதம், தேவையற்ற அழைப்புகளை கொடுத்து வாடிக்கையாளர்களை டார்ச்சர் செய்கின்றன. வர்த்தக நிறுவனங்கள் 21 சதவீத தேவையற்ற அழைப்புகளையும், தெரிந்தே தொல்லை தரும் வகையில் 20 சதவீத அழைப்புகளும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வருகின்றன என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 

[youtube-feed feed=1]