டில்லி,

ணிகர்களின் வசதிக்காக ஜிஎஸ்டி பில் ரசீதுகளை பதிவேற்றம் செய்யும் வகையில் புதிய இணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

‘இந்த இணையதளம் வரும் 24ந்தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.டி.என். இணையதளத்தில் ரசீது பதிவேற்றம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் நவின்குமார் கூறியதாவது,

ஜிஎஸ்டி பில் ரசீதுகளை பதிவேற்றம் செய்யும் வகையில்,  அதற்கென உருவாக்கப்பட்ட எக்ஸெல் எனும் மென்பொருள் வடிவிலான பக்கத்தின் மாதிரி ஏற்கனவெ வெடியிடப்பட்டுள்ளது.

வணிகர்கள்  மாத இறுதியில் நெருக்கடிகளைத் தவிர்க்க நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசீதுகளுடன் தொழில் செய்பவர்கள், தினந்தோறுமோ, அல்லது வாரம் ஒரு முறையோ அவற்றை ஜி.எஸ்.டி.என்.-ல் பதிவேற்றிக் கொள்ளலாம்.

இதன் காரணமாக கடைசி நேர நெருக்கடிகளை தவிர்க்கலாம்.

மேலும், 200 ரூபாய்க்கு மேல் தொகை கொண்ட ரசீதுகள் கையால் நிரப்பப்பட்டிருந்தாலும், ரசீது எண், வாடிக்கையாளரின் பெயர், தேதி, வாடிக்கையாளர் மற்றும் வரி செலுத்துபவரின் ஜி.எஸ்.டி.ஐ.என். பதிவெண், விநியோகிக்கும் இடம், முகவரி, ஹெச்.எஸ்.என். கோட், வரியின் மதிப்பு, தள்ளுபடி, மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டிக்களின் பங்குகளுடைய விவரங்கள் அதில் நிரப்பப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.