நெட்டிசன்:

வாயில் துணிவைத்து மூடிக்கொண்டு படிப்பது நல்லது .. #கோபம் வந்து திட்டுவீர்கள் அல்லது #வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்..

 

#தனியார் பள்ளிகளில்அரசு நிர்ணயம் செய்த கட்டண விபரம் LKG கட்டணம் – 3750

UKG கட்டணம் – 3750

1-ம் வகுப்பு கட்டணம் – 4550

2-ம் வகுப்பு கட்டணம் – 4550

3-ம் வகுப்பு கட்டணம் – 4550

4-ம் வகுப்பு கட்டணம் – 4550

5-ம் வகுப்பு கட்டணம் – 4550

6-ம் வகுப்பு கட்டணம் – 5050

7-ம் வகுப்பு கட்டணம் – 5050

8-ம் வகுப்பு கட்டணம் – 5050

9-ம் வகுப்பு கட்டணம் – 6300

10-ம் வகுப்பு கட்டணம் – 6300

–         இப்படி பத்தாம்  வகுப்பு வரை மேற்படி கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேற்படி கல்வி கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்கும் பள்ளி நிர்வாகத்தின் மீது கீழ்க்கண்ட அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள்:

–         மாவட்ட ஆட்சியர், பள்ளிகல்வி இயக்குனர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர்,

–        மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குனர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர்,

–        முதன்மை கல்வி அலுவலர்,

–        மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,

–        மாவட்ட கல்வி அலுவலர்,

–        உதவி தொடக்கக் கல்வி அலுவலர்

–        மேற்படி அதிகாரிகளுக்கு புகார் அனுப்புங்கள். புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்.

மேலும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12(1)(சி) -ன் கீழ் 2017-2018 ம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீடடின் கீழ் தனியார் பள்ளிகளில் தலா  30 மாணவர்களை LKG யில் சேர்த்துகொள்ள அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

(வாட்ஸ்அப் தகவல்)