டில்லி,

ரபரப்பாக நடைபெற்ற வந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீ‘ட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 007-ல், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கியதில், பெருமளவு முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த அலைகற்றை ஓதுக்கீடு காரணமாக, அரசுக்கு  1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு  வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி  தெரிவித்தது.  அதைத்தொடர்ந்து கடந்த  2009-ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் காரணமாக திமுகவை சேர்ந்த அமைச்சர் ஆ.ராசா  பதவியில் இருந்து விலகினார்.

கடந்த 8 ஆண்டுகளுகாக நடைபெற்ற வரும்  இவ்வழக்கில், இருதரப்பு சாட்சியமும் முடிவடைந்த நிலையில், இறுதி வாதமும் நேற்று சி.பி.ஐ நீதிமன்றத்தில் முடிவடைந்தது.

இறுதி வாதத்தை சிபிஐ நீதிமன்ற  நீதிபதி ஓ.பி. சைனி முன்பு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பதிவு செய்தார். அப்போது, தான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சட்டப்படி சரியானவையே என வாதிட்டார்.

இவ்வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில், வழக்கின் வழக்கின் தீர்ப்பு  எப்போது வெளி யாகும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே ஆர்வத்தை துண்டி வருகிறது.