டில்லி,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து மாநில அரசு விசாரணை நடத்தும் என்றும், அரசின் அறிக்கைக்கு பிறகு மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற லோக்சபா கூட்டத்தில், ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.பி.,க்கள் ஜெய லலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர்.  அவர்களின் கோஷத்திற்கு எதிர் கோஷம் போட்டனர் சசி ஆதரவு எம்.பி.,க்கள்.

இதன் காரணமாக சபையில் அமளி நிலவியது. அப்போது, நாமக்கல் எம்.பி., சுந்தரம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, 75 நாட்களாக அவரை யாரையும் சந்திக்க சந்திக்க அனுமதிக்கவில்லை.

நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக மரண டைந்ததாக கூறுகின்றனர்.

ஆகவே,  ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்தியஅமைச்சர் ஆனந்தகுமார்

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஆனந்தகுமார், ஜெயலலிதாவின் திடீர் மரணம் நாட்டிற்கும், அவைக்கும் பெரும் கவலை அளிக்கிறது என்றும்,  ஜெயலலிதா மரணம் அசாதாரணமான சூழ்நிலையில் நிகழ்ந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

எனவே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது என்றும், அரசின் விசாரணை அறிக்கை கிடைத்தபின்னர், மத்தியஅரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.