நடராஜன்

.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “சசிகலாவின் கணவர் நடராஜனை கட்சி ஆட்சியில் தலையிட அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வி.கே. சசிகலாவின் சொந்தங்களை கட்சியைவிட்டு நீக்கி விலக்கி வைத்தார். அவரது மறைவுக்குப் பிறகு, சசிகலா பொதுச்செயலாளர் ஆனார். ஜெ.வால் விலக்கி வைக்கப்பட்ட தனது சொந்தங்களில் டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை கட்சிக்குள் சேர்த்தார்

ஆனால் வெங்கடேஷையும் ஒதுக்கிவிட்டு கட்சி, ஆட்சி என இரண்டையும் தற்போது தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார் தினகரன்.

தினகரன்

அதே நேரம், சசிகலாவின் கணவர் நடராஜன் உட்பட பிற சொந்தங்கள் கட்சி ஆட்சிக்குள் ஊடுருவுவார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இன்று தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த டி.டி.வி. தினகரன், “ஜெயலலிதாவினால் ஒதுக்கிவைக்கப்பட்ட (சசிகலாவின் கணவர்) நடராஜன் மற்றும், திவாகரனை ஒருபோதும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

“அ.தி.மு.க.வில் (எங்கள்) குடும்ப ஆட்சிதான் நிலவும்” என்று அர்த்தம் தொணிக்கும் வகையில் தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நடராஜன் பேசினார். அது அவரது சொந்தக்கருத்து என்றும் அது அதிமுகவின் கருத்து அல்ல என்றும் தற்போது டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.