சென்னை:

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறிய சில தகவல்கள் தனக்கு வேதனையை ஏற்படுத்தியதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று தனது இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், தன்னை வற்புறுத்தியதால்தான்  சசிகலாவை பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தாக கூறினார். மேலும் அவர் பேசியபோது தெரிவித்ததாவது:

‘கட்சியும் ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்து முதலமைச்சர் பதவியில் இருந்து விலகச் சொன்னார்கள். ஆனால் இப்போது கட்சியும், ஆட்சியும் வேறு வேறு இடத்தில்தான் இருக்கிறது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வருவதே நோக்கம். மத்திய அரசு கண்காணிப்பில் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரிய வரும். அதற்காகவே  நான் தர்மயுத்தம் நடத்தி வருகிறேன்” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

 

[youtube-feed feed=1]