சென்னை,

மிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் சூழல் உலக மக்கள் அனைவரையும் மீண்டும் தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

சசிகலா குறித்து தமிழக முதல்வர் ஓபிஎஸ்  மக்களுக்கு தெரிவித்த அதிரடி கருத்துக்களால், அவரது பொருளாளர் பதவி உடனடியாக சசிகலாவால் பறிக்கப்பட்டது.

இதையடுத்து, ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக முன்னாள் அதிமுக நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்களால் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க அவசரப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என சுப்ரீம் கோர்ட்டும் தெரிவித்து உள்ளது.

இந்த சூழ்நிலையில் சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது குறித்து, சட்ட நிபுணர்களுடன், தமிழக பொறுப்பு கவர்னர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாளில் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு வரவில்லை என்றால், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும்  டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவார்கள் என கூறப்படுகிறது.