காஷ்மீரின் கடைசி மன்னருக்கு மரியாதை செலுத்தும் பாஜக

ஜம்மு காஷ்மீர மாநிலத்தில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன.

ஜம்மு காஷ்மீர் தனி நாடாக இருந்தபோது,  கடைசி மன்னராக பொறுப்பு வகித்தவர் மகாராஜா ஹரி சிங். இவரது ஆட்சிக்காலத்தில்தான் இப்பகுதி இந்தியாவுடன் இணைந்தது.

இவரது பேரனும் பாஜக எம்.எல்.சி.யுமான திரு.அஜத்சத்ரு சிங், “மகாராஜா ஹரிசிங் பிறந்தநாளை பொது விடுமுறையாக மாநில அரசு அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்  என்றும் வலியுறுத்தினார்.

ஆனால் ஆளும் கூட்டணி கட்சியான பி.டி.பி. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இக் கட்சியின் தலைவரும், மாநில கல்வி அமைச்சருமான நயீம் அக்தர், “ விடுமுறையாக அறிவித்துச் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை,  மாநில நிர்வாகத்தில்  ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு இன, மொழி மக்கள் வசிக்கும் ஜம்மு காஷ்மீர் பகுதியை, தனி ஒரு மனிதராக செயல்பட்டு ஒரு மாநிலமாக உருவாக்கியதில் மன்னரின் பங்களிப்பை மறக்க முடியாது. அப்படிப்பட்டவரை வைத்து  தேவையற்ற வேற்றுமையை உருவாக்க வேண்டாம் என பாஜகவிடம்.. குறிப்பாக  அக் கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினர் அஜத்சத்ரு சிங் அவர்களிடம் வேண்டிக் கேட்டுகொள்கிறேன்”, என்று கூறி பாஜக நடவடிக்கைக்கு மறைமுகமாக தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

மேலும், அஜத்சத்ரு சிங்கிடம் அக் குறிப்பிட்ட தீர்மானத்தை திரும்பப்பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே நேரம் அஜத்சத்ரு சிங் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு  பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த பி.டி.பி. உறுப்பினர் சுரீந்தர் சவுத்ரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர், “மன்னர் ஹரிசிங், ஒரு மாபெரும் ஆட்சியாளர்.  மதச்சார்பற்றவராக திகழ்ந்து, அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் சென்றார். மக்கள் அவரை மிகவும் நேசித்தனர்” என்று  சிங் தெரிவித்தார்.

 

ஆனால் மன்னர் பிறந்தநாளை மாநில அரசு பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு  தேசிய மாநாடு (NC) உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பிறகு தீர்மானம் ஏற்கப்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் ஆளும் கூட்டணிக்கட்சிகளான பாஜக மற்றும் பிடிபிக்குள் நிலவும் முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

.