மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் சானியா – டோடிக் ஜோடி 6-4, 2-6, 10-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் சமந்தா – சாம் குரோத் ஜோடியைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.