புளோரிடாவின் மலைப்பாம்பைப் பிடிக்க களமிறங்கும் இரு தமிழர்கள்
20 அடிவரை நீளமுள்ள பர்மிய மலைப்பாம்புகள் உலகிலேயே மிகப் பெரிய பாம்புகளாகும். இந்த இந்தோசீனா பூர்வீக பாம்புகள், சூடான மிதவெப்பமண்டல காலநிலை உள்ள தெற்கு புளோரிடாவின் பரந்த ஈரநில சுற்றுச்சூழலில் அதிக அளவில் காணப்படுகின்றன. 1990 ஆம் ஆண்டில் பர்மிய மலைப்பாம்புகள் எவர்கிளேட்ஸ் தேசிய பூங்கா முழுவதும் பரவி இருந்தன. நீர் மற்றும் வன மேலாண்மை தொழிலாளர்கள் 2006 ஆம் ஆண்டு பூங்காவின் உள்ளே முதல் கூட்டைக் கண்டுபிடித்து, 2007 ஆம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 600 கூடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். எத்தனை மலைப்பாம்புகள் புளோரிடாவில் வாழ்கின்றன என்று யாருக்கும் தெரியாது.
அந்தப் பாம்புகள் நடப்பன பறப்பன என அனைத்தையும் உண்டாலும், அவை சாகும் வரை முதலைகளுடன் போராடினாலோ அல்லது மூன்று மான்களை விழுங்கினாலோ அது செய்திகளில் பரபரப்பை ஏற்படுத்திவிடுகிறது.
1999 வரை, ரக்கூன்கள், வர்ஜீனியா ஒப்போஸம்கள், மற்றும் சதுப்பு முயல்கள் இரவில் சாலைகளில் இறந்து கிடப்பது ஒரு பொதுவான காட்சியாக இருந்தது. ஆனால் 2003 க்குப் பின்னர், சாலைவிபத்து பலி எண்ணிக்கையில் முயல்கள் இல்லை. 2012 ஆம் ஆண்டில், ரக்கூன்கள் மற்றும் ஒப்போஸம்களின் எண்ணிக்கை 99 சதவீதம் குறைந்துள்ளதாகவும் , வெள்ளை-வால் மான் 94 சதவீதம், மற்றும் பாப்கேட்ஸ் 87 சதவீதம் குறைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மலைப்பாம்புகள் தான் இந்த விலங்குகளின் இறப்பிற்கு காரணம் என்று ஆதாரங்கள் காட்டுகின்றன. பல்வேறு வன மேலாண்மை நிறுவனங்கள் பாம்புகளைப் பிடிக்க போராடியது.
இந்தப் பாம்புகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள், பைதான் பீட் என்ற பீகள், வெப்பத்தை உணரும் ட்ரோன்ஸ், பொறிகள், மற்றும் உள்ளூர் பாம்பு வேட்டைக்காரர்கள் உட்பட பல்வேறு முறைகளை வைத்து சோதனை செய்தனர். அவர்கள் அறுவை சிகிச்சைமூலம் பெரிய பெண் மலைப்பாம்புகளின் உள்ளே ரேடியோ டிரான்ஸ்மிட்டரை பொருத்தி அதனை அவிழ்த்துவிட்டனர். இந்தப் பாம்புகள் மற்ற மலைப்பாம்புகளிடம் அவர்களைக் கொண்டு சென்றது. இனப்பெருக்க காலத்தில், ஆண் மலைப்பாம்புகள் பெண் மலைப்பாம்புகளைத் தேடிச் செல்லும், பெரும்பாலும் பல ஆண் மலைப்பாம்புகள் ஒரே பெண் மலைப்பாம்பிடம் இனப்பெருக்கம் செய்யும். இந்த முறைகள் அனைத்தும் வரையறுக்கப்பட்ட முடிவுகளை கொடுத்தன.
ஜானகி லெனின், ஃபர்ஸ்ட்போஸ்ட் இதழின் பத்திரிகையாளர், கூறுகையில், “2009 ல், என் கணவர் ரோம் விட்டேகர் தனது தாயகத்தில் பாம்புகளின் நடமாட்டம் இருப்பதைப் பற்றிச் செய்தியில் படித்தபோது அவருக்கு ஒரு யோசனை வந்தது: இருளா பழங்குடியின பாம்பு வேட்டைக்காரர்களை தமிழ்நாட்டிலிருந்து புளோரிடாவிற்கு கொண்டு வர வேண்டும். 1975 ல் இந்தியா பாம்புகள் தோல் வர்த்தகத்தைத் தடை செய்யும் வரை தோல் தொழில் செய்வதற்காக மலைப்பாம்புகள் உட்பட பல விதமான பாம்புகளை இருளர்கள் பிடித்துள்ளனர். இருளர்கள் ‘உலகின் சிறந்த பாம்பு வேட்டைக்காரர்கள்’ என்றும் அவர்கள் பாம்புகளின் இருக்கும் பொந்துகளுக்கேச் சென்று பாம்புகளைக் கண்டுபிடிப்பர் என்றும் என் கணவர் அறிவித்தார். ஆனால் இந்தியாவில் செய்வது போல அவர்களால் எவர்கிளேட்ஸ் போன்ற அறிமுகமில்லாத நிலப்பரப்பிலும் திறன்பட செய்ய முடியுமா? அமெரிக்காவில் உள்ள சில வன மேலாண்மை நிறுவனங்கள் இவர்கள்மேல் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதற்கிடையில், ரோம் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃப்ராங்க் மசோட்டி மற்றும் பல ஆண்டு ஹெர்படாலஜிஸ்ட் நண்பரான ஜோசப் வசிலியூஸ்கி ஆகியோரைத் தொடர்பு கொண்டு பாம்புகளை எப்படி அழிப்பது என்று விவாதித்து வந்தார். மாசி, வடிவேல் என்ற இரண்டு இருளர் பாம்பு வேட்டைகாரர்களுக்கு, ஐகான் பிலிம்ஸ் என்ற பிரிட்டனில் உள்ள ஒரு படத் தயாரிப்பு நிறுவனத்தின் உதவியுடன் பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க விசாவை ஏற்பாடு செய்தார்.
ஆனால் அமெரிக்கர்களிடமிருந்து எந்தத் திட்டமான செய்தியும் வரவில்லை.
இந்த மலைப்பாம்புகளைப் பிடிக்காவிடில் அவை எவ்வளவு தூரம் பரவும்? 2008 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள், மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கா, வாஷிங்டன் DC வடக்கே, மற்றும் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா மேற்கே வரை மலைப்பாம்புகள் படையெடுக்கலாமென மதிப்பிட்டுள்ளனர். மற்றவர்கள் இந்தக் கணிப்பை மறுத்தார். ஏனெனில் தீவிர குளிர்காலத்தின் குளிர் மலைப்பாம்புகளிற்கு பெரும் தடையாக இருக்கும் என்று கூறினர். உண்மையில் 2010 ஆம் ஆண்டு ஜனவரியில், அதிக குளிரினால் ஆழமற்ற சதுப்புகளில் இருந்த பல மலைப்பாம்புகள் கொல்லப்பட்டன. 3000 க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள் இப்போது வரை அகற்றப்பட்டுள்ளன.
மாசி, வடிவேல் ஆகிய இரண்டு இருளர்களும் சரிவில் குதித்து, ஒரு எட்டு அடி நீளமுள்ள பர்மிய மலைப்பாம்பை வெளியேற்றினர். அந்தப் பாம்பு அவ்வளவு பெரியதாக இருந்தது, ஒரு முறை பார்த்துவிட்டால் நமது பார்வையிலிருந்து அதனால் தப்பிக்க முடியாது. அவர்களின் பிடியிலிருந்து தப்புவதற்காக போராடிய பாம்பு, வாலைப் பிடித்திருந்த மாசியின் மேலேயே அதன் கழிவை வெளியேற்றியது. இருளர்கள் மலைப்பாம்பை பையில் வைத்து மூடியபின்னர், அதைப் பார்த்து ஈர்க்கப்பட்டிருந்த அமெரிக்கர்கள் பாம்பு மலம் எவ்வளவு துர்நாற்றமாக உள்ளது என்றபடி தங்கள் விரல்களால் அவர்களின் மூக்கை மூடிக் கொண்டனர்.
“மலத்தைக் கண்டு நான் கவலைப்பட முடியாது,” என்று மாசி தமிழில் அறிவித்தார். “இதனால் மூடப்பட்டிருந்தால் மட்டுமே உங்களால் பாம்புகளை எளிதாகப் பிடிக்க முடியும்.” அது தான் மாசி மற்றும் வடிவேல் எவர்கிளேட்ஸ், புளோரிடாவிற்கு வந்து இரண்டாவது நாள், அதற்குள் அவர்கள் ஐந்து மலைப்பாம்புகளைப் பிடித்தனர்.
ஆகஸ்ட் 2016 ல், ஃபுளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் இத்திட்டத்திற்கு பச்சை கொடி காட்டியது.
எவர்கிளேட்ஸின் மற்ற பகுதிகளில் பாம்புகளை வேட்டையாட அனுமதிக்காகக் காத்திருக்கும் போது நாங்கள் கீ லார்கோவின் முதலை ஏரி தேசிய வனவிலங்கு சரணாலயப் பகுதியில் உள்ள நைக் மிசைல் பேசைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும்.
“மலைப்பாம்புகளைப் பிடிக்க இது சரியான இடம் இல்லை,” என்று ஜோ கூறி ஒரு பலனற்ற நாளிற்காக மாசி மற்றும் வடிவேலைத் தயார் செய்தார்.
ஆனால் இருளர்கள் ஒரு கான்கிரீட் பதுங்குக்குழியில் ஒரு மின் சேனலின் உள்ளே ஒரு மலைப்பாம்பைக் கண்டனர். அந்தப் பெண் மலைப்பாம்பு எட்டு அடி நீளம் இருந்தது.
“கீ லார்கோவில் மலைப் பாம்புகளைத் தேடிச் சென்றவர்கள் யாரும் அதனைக் கண்டதில்லை”, என்று இத்திட்டத்தில் இணைந்துள்ள உயிரியலாளர் மூன்றாம் எட்மெட்ஸ்கெர் கூறினார்.2015 இல், நிலப்பகுதியில், எட் ஒரு பதினெட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பை தனிமனிதராகப் பிடித்தார்.பாம்பை அடைக்கும் அளவிற்கு அவரிடம் போதுமான பெரிய பை இல்லை, அதனால் அவர் ஒரு பெரிய பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்து வைத்தார்.
இந்தக் கதையைக் கேட்டதிலிருந்து, மாசி மற்றும் வடிவேல் அதே போல் ஒரு பெரிய பாம்பைக் கண்டுபிடிப்பதில் உறுதியாக இருந்தனர்.
மாசி மற்றொரு பதுங்குக்குழி நுழைவாயிலைத் தடுத்து நின்ற அத்தி வேர்களை வெட்டி. எறிந்து, யாரும் நீண்ட காலமாக உள்ளே செல்லாத பதுங்குக்குழி நுழைவாயிலுக்குள் சென்றனர். வடிவேல் மற்றும் மாசியைத் தவிர எஞ்சிய அனைவரும் வெளியே பேசிக் கொண்டிருந்தோம். மற்றொரு மலைப்பாம்பைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது என்று மற்றவர்கள் கூறினார்கள்.
சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், “மலைப்பாம்பு!!!”, என்று இருண்ட பங்கருக்குள் இருந்து சிரித்துக் கொண்டே மாசி கூப்பிட்டார்.
ஒரு சக்தி வாய்ந்த டார்ச் ஒளியில் உதவியோடு அந்த இருளில் பாம்பைத் தேடினோம். அந்த 18 அங்குல நீளமும் 9 அங்குல அகலமும் உள்ள சுரங்கப்பாதையில் ஒரு பெரிய மலைப்பாம்பு சுருண்டு கிடந்தது. ஒரு பெரிய கம்பை வைத்து அந்தப் பாம்பை மாசி தட்டினார். வடிவேல் தனது கடப்பாரையைக் கொண்டு அந்தப் பங்கரைத் தோண்ட தொடங்கினார்.
அவர்களின் யோசனை என்னவென்றால் அது நகரும் அளவிற்கு அதை எரிச்சலூட்ட வேண்டும். ஆனால் அது அசைந்து கொடுப்பதாக இல்லை. ரோ மற்றும் ஜோ அதைத் தட்டும் வேலையை எடுத்துக்கொண்டனர், மாசி வடிவேலுக்குத் தரையைத் தோண்டுவதில் உதவினார். சிறிது நேரத்தில் இருளர்கள் கான்கிரீட் தண்டை உடைத்து மலைப்பாம்பை வெளியே கொண்டு வந்தனர். நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த போது, யாரோ ஒருவர் அந்த ஆண் பாம்பு சுரங்கப்பாதையில் இருந்தது போல் பெரிதாக இல்லை என்று குறிப்பிட்டார். அப்படியென்றால் மற்றொரு மலைப்பாம்பு உள்ளே இருந்ததா என்ற கேள்வி எழுந்தது.
நாங்கள் மீண்டும் அந்தப் பதுங்குக்குழிக்கு விரைந்து சென்று உள்ளே உற்று நோக்கினோம். ஆமாம், அங்கே மற்றொரு பெரிய மலைப்பாம்பு இருந்தது. மறுபடியும் அனைவரும் வேலை செய்யத் தொடங்கினர். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆறு பேர் சேர்ந்து அந்தப் பாம்பின் வாலைப் பிடித்து அதை வெளியே இழுத்தனர். அது பெண் மலைப்பாம்பு. அது இனப்பெருக்க காலத்தின் தொடக்கம், ஆதலால் இரண்டு ஆண் மலைப்பாம்புகளும் அந்தப் பெண் மலைப்பாம்புடன் தங்கியிருந்தன.
அது 75 கிலோகிராம் எடையும் 15.65 அடி நீளமும் அளவிடப்பட்டது. அத்தகைய பாம்பு ஒரே தடவையில் குறைந்தது 10 மரேலிகளை விழுங்க முடியும்.
இதுவரை இந்திய பாம்பு வேட்டைக்காரர்கள் 14 நாட்களில் 14 மலைப்பாம்புகளைப் பிடித்துள்ளனர். சமீபத்தில் ஃபுளோரிடாவின் நாட்டு விலங்கினங்களைக் காப்பாற்றும் முயற்சியில் இந்தியாவில் இருந்து மலைப்பாம்பின் பழைய எதிரியான இருளர்கள் சேர்ந்துள்ளனர்.