மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆங்கில இதழுக்கு முதன்முறையாக பேட்டி அளித்துள்ளார்.அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவோடு ஏறத்தாழ 33 ஆண்டுகள் உடனிருந்த சசிகலா. ஜெ.,
 மறைவுக்குப் பிறகு  அதிமுக-வின் பொதுச் செயலாளர் பதவிக்கு வர  காய்நகர்த்தி வருகிறார்.  ஜெயலலிதாவின் சொத்துகளை  எடுத்துக் கொள்ள திட்டமிடுகிறார் என்றும் பலவித சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.
ஆனால் அவர் இதுவரை எந்த ஒரு ஊடகத்துக்கும் பேட்டி அளித்ததில்லை. ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும் முன்பு ஒரு தமிழ் வார இதழில் சசிகலாவின் நேர்காணல், “விளையாட்டிற்கு வருகிறது” என்ற தலைப்பில் வெளியானது. அதற்குப் பிறகு ஜெயலலிதாவின் நட்பு கிடைத்தவுடன்,  ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகியே இருந்தார்.
இந்த நிலையில் சசிகலா, முதன்முறையாக  பிரவோக் என்ற பிரபல ஆங்கில இதழுக்கு பேட்டியளித்துள்ளார். இதை,  அந்த இதழின் ஆசிரியர் அப்சரா ரெட்டி  சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார்.  இவர் ஒரு திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த பேட்டியில் ஜெயலலிதாவுடன் தான் பழகியது  ஜெ.,  மறைவு  தற்போது தன்னைச்சுற்றி நடந்து கொண்டிருக்கும்  அரசியல்,என்று பல விசயங்களுக்கு சசிகலா பதில் அளித்துள்ளார்.
இந்த பேட்டி, வரும் ஜனவரி மாத பிரவோக் இதழில் வெளியாகிறது.