rasi-weekly-vedha-gopalan
1
மேஷம்
உங்க வீட்டில் யாருக்கோ திருமணமோ, சீமந்தமோ வேறு ஏதேனும்  விசேஷமோ வருதுங்க. சேலைகளுக்கெல்லாம் அழகா பிளவுஸ் ரெடி  பண்ணுங்க… பொது விழா அல்லது அலுவலக விசேஷத்தில மைக் பிடிச்சு சூப்பராப் பேசிப் பாராட்டு வாங்கப் போறீங்க. மைக்கில் மட்டுமல்லாமல் எங்கேயும் எப்போதும் யாரிடமும் எந்த சூழலி லும் பேச்சினால் வெற்றியும் செல்வாக்கும் கியூவில் நிக்கும். செவ்வாய் பத்தாம் வீட்டில் இருப்பதால் வருவதால் திடீரென்று உத்யோக மாற்றங்கள் ஏற்படும். அவர் பதினோராம் வீட்டுக்கு நகர்வதால் திடீர்  லாபங்கள் உண்டாகும். மருத்துவர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சம்பந்தமுள்ள துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டு.
2
ரிஷபம்
ஏழில் சூரியனும் சனியும் இருப்பதால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்படாதபடி அனுசரித்துப் போக வேண்டும். ஐந்தாம் வீட்டில் குரு இருப்பதால் புண்ணியங்கள் செய்வீர்கள்.எதுக்குங்க வேண்டாத விஷயங்களுக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு பயந்து நடுங்கறீங்க? கடவுள் தோளில் எல்லா வெயிட்டையும் இறக்கி வெச்சு மனசை லைட்டாக்கிக்குங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். கவலைப் படாதீங்க. தடையும் தாமதமும்தானே ஆகுது? கிளைமேக்ஸ்ல நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க. அது புரியுதா இல்லையா? அந்தப் பொல்லாத கோபத்தை அடுப்பில் போடுங்க. ஆமாம்.  சொல்லிட்டேன்.
சந்திராஷ்டமம்: 01.12.2016 வியாழன் அதிகாலை 03.09 முதல் 03.12.2016 சனி பகல் 12.55 வரை
3
மிதுனம்
ஏழில் சுக்கிரன் இருப்பதால் கணவன்  மனைவிக்கிடையே நல்லுறவு இருக்கும். திருமணமாகாதவர்களுக்குக் காதல் திருமணம் கைகூடும். ஒன்பதில் செவ்வாய். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு! கவலையைத் தூக்கி மேஜைக்குக் கீழே உள்ள அந்த டஸ்ட் பின்னில் போடுங்க. இப்போதைக்கு லோன் எதுவும் வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டவே வேண்டாம். நேரம் காலம் பார்க்காமல் கணிணியின் காலடியில் உட்கார்ந்து உழைக்கறீங் களே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கக்கூடாதா? அதிருஷ்டத்தையெல்லாம் இப்போதைக்கு நம்பவே வேண்டாங்க. நேர்மையும் உழைப்பும் மட்டும்தான வின்னிங் போஸ்ட் தொடும்.
சந்திராஷ்டமம்:   03.12.2016 சனிக்கிழமை பகல் 12.56 முதல் 05.12.2016 திங்கள் இரவு 08.22 வரை
4
கடகம்
ஆறில் இது வரை இருந்த சுக்கிரன் நகர்ந்து ஏழாம் வீட்டுக்கு வருகிறார். காதலில் இது வரை இருந்து வந்த தடைகள் நீங்கும். கணவன் மனைவி பிரச்சினைகள் சரி யாகும். சம்பளம் கூடுதலாகும் சரி. பெருமையான பொறுப்பு தருவாங்க ..ஆம். உன்னைப் போல உண்டான்னு அலுவலகத்தில் ஆரத்தி எடுப்பாங்க…கரெக்ட். அதுக்காக உழைப்பதற்கு ஒரு அளவில்லை? முதுகு பெண்ட் ஆகிற வரைக்குமா உழைக்க முடியும்? கொஞ்சம் உங்கள் ஆரோக்யத்தையும் பார்த்துக்குங்கங்க. சரியா? அதிலும் மத்தவங்களுக்கு உழைக்கணும்னா ஓடிப்போய் முதல் ஆளா நிப்பீங்க. என்னங்க இது?
சந்திராஷ்டமம்:    05.12.2016 திங்கள் இரவு 08.23 முதல் 07.12.2016 புதன் இரவு 01.27 வரை
5சிம்மம்
ராசியின்மீது ராகு அமர்ந்திருப்பதால் வெற்றிப்படியில் சில தடைகள் நேரிடலாம். பொருட்படுத்த வேண்டாம். ஏழாம் வீட்டுக்குச் செவ்வாய் வருவதால் திருமணம் சம்பந்தமான விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். உங்க கிட்ட ஒரு விஷ யத்தைப் பாராட்டியே தீரவேண்டும் சிம்மம்ஸ்! தலைகால் தெரியாமல் குதிக்க வேண்டிய அல்லது தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார வேண்டிய நேரத்தில் ஒரு அடக்கம் காண்பிச்சு பாதிப்பில்லாமல் காட்டிக்கறீங்கறே! அது! இப்போ முதல் வகை கால கட்டம். பொறுப்பை உணர்ந்து செயல்படறீங்கங்க. கீழே வேலை பார்க்கறவங்களைக் கொஞ்சம் கண்காணியுங்க.
சந்திராஷ்டமம்: 07.12.2016 புதன் இரவு 01.28 முதல் 10.12.2016 சனிக்கிழமை அதிகாலை 04.51 வரை
6
கன்னி
பன்னிரண்டில் ராகு இருப்பதால் அவசியமற்ற செலவுகள் செய்ய வேண்டியிருக்க லாம். நாலில் புதன் இருப்பதால் கல்வியில் சிறப்புப் பெற்று வெற்றியடைவீர்கள். கொஞ்சம் கொஞ்சமாய் நிலைமை சரியாகிக் கொண்டே வரும். உல்லாசப் பய ணத்துக்கு வரும்படி யாராவது உங்களை டெம்ப்ட் செய்தால் நோ என்பதை அழுத்தமாக ஆனால் அடக்கமாக சொல்லிடுங்க. உங்களால் தவிர்க்க முடியக்கூடிய பயணத்திற்கெல் லாம்  ‘நோ’ தான். வேறு வழியில்லாத அலுவலகப் பயணத்தை மட்டும் ஒப்புக்குங்க. செலவு பத்தி பயப்பபடாதீங்கங்க. அது நன்மையும் மகிழ்ச்சியும்தான் தரும்.
7
துலாம்
நாலில் உள்ள சுக்கிரன் உங்களைக் கல்வி  நிலையத்தில் புகழ்பெறச் செய்வார். ஐந்தில் செவ்வாயும் கேதுவும் இருப்பதால் குழந்தைகளை மிகவும் ஜாக்கிரதை யாகக் கையாளுங்கள்.மிஸ்டர் குரு பகவான் உங்க கணவருக்குரிய வீட்டைக் குறுகுறுன்ன பார்த்துக்கிட்டிருக்கார். எடுத்த காரியம் யாவினும் வெற்றி. எனினும் ஏழரைச் சனியை மனதில் கொண்டு (வால்யூம் கம்மியா) அடக்கி வாசியுங்க. மூட்டை மூட்டையாய்ப் பணத்தைக் கொண்டு போய் எதிலும் இன்வஸ்ட் செய்ய வேண்டாம். எனினும் சின்ன அள வில்  ரிஸ்க் எடுப்பதில் லாபம் உண்டு. குழந்தைங்க பத்திய பயத்தைக் கழற்றிக் கடாசுங்க. நல்லா இருப்பாங்க.
8
விருச்சிகம்
இரண்டாம் வீட்டில் புதனும் சுக்கிரன் இருப்பதால் பேச்சில் மிகுந்த புத்திசாலித் தனமும் கவர்ச்சி அம்சமும் கூடும். பதினோராம் வீட்டில் குரு. லாபங்கள் அதி கரிக்கும்.நல்லது நடக்கும். நல்லதே நடக்கும். எனினும் எதையாவது ஏடாகூட மாய்ச் செய்து வைக்கவும் வேண்டாங்க.. நல்லவங்களா இருங்க. ஜாலியா என்ஜாய் செய்வது எந்த அளவு முடியுமோ அந்த அளவு படிப்பில் கவனத்தைக் கொண்டு போய்க் கொட்டுங்க. அதென்ன அப்படி ஒரு எக்ஸ்பிரஸ் வேகக் கோபம்? நோ.. அதைக் கவர் போட்டு மூடுங்க. யோசிச்சா ஒரு நெல் முனையளவுகூட உங்க மேல நியாயம் கெடையாது. பிறகென்ன மேடம்?
9
தனுசு
ராசியின் மீது உள்ள புதன் வக்கிரகதியில் இருப்பதால் சில சமயங்களில் குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்படலாம். குடும்ப ஒற்றுமை கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல காலம் தான் நடக்குது. எங்கும் எதிலும் காத்துக் கிட்டிருந்த நன்மையெல்லாம் கனியப்போகுது. முன்னோர் வழியில் ஏதாவது சொத்து வரும். உங்களை எந்தத் திறமை இல்லாதவர்னு எல்லாலும் கிண்டல் செய்துக்கிட்டிருந்தாங்களோ அதே திறமையில் வைராக்யமாய் ஜெயித்துக் காட்டுவீங்க. இந்தத் தன்னம்பிக்கை…. தன்னம்பிக்கைன்னு ஒண்ணு இருக்கே.. அது முதல்ல பிடிபடும்.அது போய் மற்ற எல்லா நன்மைகளையும் அழைச்சுக்கிட்டு வரும்.
10
மகரம்
ராசியை குரு பார்ப்பதால் நன்மையும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். இரண்டில் கேது இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. அந்த வீட்டுக்குச் செவ்வா யும் வருவதால் கோபமான பேச்சைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் நிச்சய தார்த்தம்.. திருமணம்.. வளைகாப்பு.. குட்டி பாப்பாவுக்குப் பெயர் சூட்டுவிழா என்று ஏதாவது ஒரு சுப காரணத்திற்காக சந்தனம் வீடியோ பூமாலை அமர்க்களப்படும். மம்மிக்கும் உங்க ளுக்கும் இடையில் சந்தோஷம் தரும் நல்லுறவு இருக்குங்க. உங்களை அவங்க ரொம்பவும் சப்போர்ட் செய்வாங்க. அப்பாவுக்குத்தான் டூர் போகவே நேரம் சரியா இருக்கே! சாப்பிடும் விஷயத்தில் கவனமா இருங்க. நேரத்துக்கு சாப்பிடுங்க. அளவா சாப்பிடுங்க.
11
கும்பம்
பன்னிரண்டில் செவ்வாய் இருப்பதால் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதுபோல் இருந்தாலும் வாரக்கடைசியிலேயே செவ்வாய் நகர்ந்துவிடுவதால் பிரச்சினை தீரும். பன்னிரண்டில் சுக்கிரன் இருப்பதால் ஆபரணங்கள் அணிமணிகள் வாங்க சற்று அதிகம் செலவு செய்வீர்கள். அரசாங்கத்தின் மூலம் ஏதோ ஒரு நன்மை எதிர்பார்த்துக் கிட்டிருந்தீங்களாங்க? அது நல்ல முறையில் நிறைவேறுமே. சகோதரர்களுக்கு ஏதோ ஜாக்பாட் அடிக்கப்போகுது. அவங்க கூட நல்லுறவு இருக்கும். அனுசரணை இருக்குங்க. ஒருத்தருக்கொருத்தர் உதவியாய் இருப்பீங்க. திடீர்னு வெளிநாட்டுக்க பேக் செய்ய வேண்டி வரலாம். சூட்கேஸ் ரெடியா? 
12
மீனம்
பதினோராம் வீட்டில் பல கிரகங்கள் இருப்பதால் ஒன்றிற்க மேற்பட்ட வருமானங் கள் வரும். பத்தாம் வீட்டில் புதன் வக்கிரமாகியிருப்பதால் புதிய வேலை தேடும் பணி இப்போதைக்கு வேண்டாமே குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உங்க மம்மி யின் ஆதரவால் உங்களுக்கு ஒரு நன்மை ஏற்படுங்க. புது வண்டி வாங்கப் போறீங்களே. பார்த்து ஓட்டுங்க. அலுவலகத்தில் புதிய பொறுப்பு. அதிக சம்பளம். அபரிமிதமான மரியா தைன்னு உங்களை உயரத்தில் தூக்கி வைப்பாங்க. வேலைதான் கொஞ்சம் அதிகமா இருக்கும். அதை ஊதித்தள்ளுங்க.  அந்த நேர விரய விஷயங்களையெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டுங்கங்க. ப்ளீஸ்…