சென்னை,
கடந்த 2011ல் நடைபெற்ற தேர்தல் வழக்கில், நேற்று மு.க.ஸ்டாலின் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது எதிர்தரப்பு வழக்கறிஞர் கேள்விக்கு பதில் அளித்தார்.
சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் தேர்தல் வழக்கில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகி பதில் அளித்தார். அப்போது நடிகர் வடிவேலுக்கு, தேர்தல் பிரசாரம் செய்ததற்கான பணம் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டனர்.
ஸ்டாலின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் மு.க.ஸ்டாலினிடம், சைதை துரைசாமியின் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்து வருகிறார்.
ஏற்கனவே, இரண்ட முறை குறுக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகியுள்ளார் மு.க.ஸ்டாலின்.
நேற்று 3வது முறையாக ஐகோர்ட்டில் ஸ்டாலின் ஆஜராகி, குறுக்கு விசாரணைக்கு பதில் அளித்தார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
வழக்கறிஞரின் கேள்விக்கு பதில் கூறிய ஸ்டாலின், 2011 தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின்போது 18வது சுற்றின் முடிவில் 1,700 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தேன் என்றும், தெருமுனை கூட்டம் நடத்திய குறித்து ஞாபகமில்லை என்றார்.
மேலும், வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யவில்லை, குறிப்பிட்ட வீதிகளுக்கு சென்று பிரசாரம் செய்தேன் என்றார்.
தேர்தல் செலவு குறித்து தற்போது ஞாபகமில்லை என்றும், தேர்தலின் நான் பயன்படுத்திய வாகனம் எனது மகனுடையது என்றும் வாக்குமூலம் கொடுத்தார். தேர்தல் சமயத்தின் தான் பயன்படுத்தியது எனது நண்பரின் ஜீப் என்றும்,
எனக்கு ஆதரவாக சுப.வீர பாண்டியன், திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் எனது மனைவி துர்கா பிரசாரம் செய்தார்கள் என்றும் அதற்கான செலவு குறித்த தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும் நடிகர் தனது தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்தார் என்று ஒப்புக்கொண்ட ஸ்டாலின், அவருக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு தெரியாது என்று கூறினார்.
தேர்தல் நேரத்தில் கொளத்தூர் தொகுதியில் ரூ.1 கோடியே 18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி குறித்து வழக்கறிஞரின் கேள்விக்கு, அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.
இதன்பின்னர் வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இன்றும் விசாரணை நடைபெறுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வழக்கே தற்போதுதான் விசாரணை நடைபெற்று வருகிறது.
5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டு மறுபடியும் தேர்தல் நடைபெற்று சட்டமன்ற உறுப்பின ராக ஸ்டாலின் மீண்டும் பதவி வகித்து வருகிறார்.
ஆனால், 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வழக்கோ 2016ம் ஆண்டுதான் விசாரணை நடைபெற்று வருகிறது.
எத்தனையோ வழக்குகளை உடடினடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது, இதுபோன்ற வழக்குகளும் உடடினடியாக விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம்.
விசாரணையில் குற்றமற்றவர்கள் என நிருபிக்கப்பட்ட பிறகுதான் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வகை செய்ய வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தீர்ப்புகளும் திருத்தப்பட வேண்டும்… அரசியல் சாசனமும் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
ஒருவேளை இதுபோன்ற வழக்கில் வெற்றி பெற்றது செல்லாது என்று ஐகோர்ட்டு அறிவித்தால்…. கடந்த 5 ஆண்டுகளாக அனுபவிக்கப்பட்ட பதவி சுகம் மற்றும் வசதி வாய்ப்புகள் திருப்ப பெறப்படுமா….?