நெட்டிசன்:
வல்லம் பசீர் (Vallam Basheer ) அவர்களின் முகநூல் பதிவு:
“பிரச்சனைகளை கருத்தியலால் எதிர்கொள்வது தான் முறையே தவிர தனிமனித விமர்சனம் ஏற்புடையது அல்ல.

பிரதமர் மோடியின் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்து வரும் சூழலில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் அமைப்பு நேற்று ஒரு கண்டன கூட்டத்தை நடத்தயது . அதில் பேசிய பி.ஜெயினுல்ஆபிதீன் மோடியை ஒன்பது என்றும் , ஏகவசனங்களிலும் தனி மனித தாக்குதலில் ஈடுபட்டார் .
விஸ்வரூபம் பட விவகாரத்திலும் இதே போன்று தான் நடிகர் கமலஹாசனை மகளோடு படுத்துக்கொள்வாயா என்றெல்லாம்அருவருக்கதக்க விதத்தில் வசைபாடினார் . தொடர்ந்து இதே போன்ற செயலில் ஈடுபட்டு வரும் ஜெய்னுல்ஆபிதீன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் .
ஒரு அமைப்பிற்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.”
Patrikai.com official YouTube Channel