
பெங்களூருவில் துனியா விஜய் நடித்து வரும் மஸ்தி குடி ஷூட்டிங்கில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கும் போது 2 நடிகர்கள் ஏரியில் மூழ்கி பலியாகியாள்ளது கன்னட திரையுலகை ஆழ்ந்த வருத்ததில் ஆழ்த்தியுள்ளது.
துனியா விஜய் நடித்து வரும் கன்னட படம் மஸ்தி குடி. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பெங்களூரு அருகே உள்ள திப்ப கொண்டனஹள்ளி ஏரியில் நேற்று படமாக்கப்பட்டது. அப்போது விஜய் மற்றும் வில்லன்களாக நடித்து வரும் உதய் மற்றும் அனில் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரிக்குள் குதிக்கும் காட்சியை படமாக்கியுள்ளனர்… மூன்று பேரும் ஹெலிகாப்டரில் 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்துள்ளனர்.
குதித்த பின்னர் தான் எல்லோருகும் தெரியவந்துள்ளது விஜய்யை தவிர இருவருக்கும் நீச்சல் தெரியாது என்பது, மூவரில் ஹீரோ விஜய் மட்டும் நீந்தி கரைக்கு வந்துட்டார். அனில் மற்றும் உதய் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் படப்பிடிப்பை நடத்தியுள்ளதால் மட்டுமே இருவரும் உயிர் இறந்துள்ளனர். இந்த சம்பம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel