afternoon-news
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை ஒட்டி 144 தடை உத்தரவை ஆட்சியர் சத்தியேந்திர சிங் துர்சாவத் பிறப்பித்துள்ளார். மேலும் துப்பாக்கிகள், ஆயுதங்களை எடுத்த செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு காவலர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுக்க கூடாது என எஸ்பி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி காவலர்களுக்கு காவல் தலைமையிட எஸ்.பி.மோகன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் , அதிபர் தேர்தல் அமைப்பு மோசடியானது என்று கூறியிருப்பதை ” ஆபத்தான, மற்றும் ஜனநாயகத்தை அரித்தெடுக்கக்கூடிய’ கருத்துக்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ,வர்ணித்திருக்கிறார்.
தஞ்சாவூர் தொகுதியில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும், அரவக்குறிச்சி தொகுதியில் கே.சி. பழனிச்சாமியும், திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதியிலும் தஞ்சாவூர் தொகுதியிலும் ஏற்கனவே போட்டியிட்டவர்களே தற்போதும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. சார்பில் போட்டியிட விண்ணப்பித்த வேட்பாளர்களின் நேர்காணல் இன்று முடிந்த நிலையில், தி.மு.க. இந்த அறிவிப்பைச் செய்துள்ளது
தமிழக அரசியலில் இரு பெரும் கட்சிகள் என்றால் அது அதிமுகவும், திமுகவும் தான். அந்த இரு கட்சியின் தலைவர்களாக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் எதிரிகள் போல அரசியல் செய்வார்கள்.ஆனால் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது திமுக தலைவர் கருணாநிதி ஜெயலலிதா உடல் நலம் பெற்று விரைவில் தனது பணிகளை தொடர வாழ்த்து கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ஜெயலலிதாவிடம் எனக்கு பிடித்த விஷயம் அவருடைய நடிப்பு மற்றும் நடனம் எனவும். பிடிக்காத விஷயம் காழ்ப்புணர்ச்சி அரசியல் என்று சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவை மட்டுமல்ல யாரையுமே நான் அரசியல் எதிரியாக கருதியது இல்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்
ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, திமுகவின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.
கடந்த ஒரு வார காலமாக முதல்வர் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தை அதிகப்படுத்த அப்பல்லோ மருத்துவர்கள் கடுமையாக போராடினார்கள். தற்போது முதல்வர் ஜெயலலிதா நேற்று 8 மணி நேரம் மயக்க நிலைக்கு வெளியே, இயல்பு நிலையில் இருந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தான் நடித்த படங்களை கூட பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்க்காத சிம்பு, தல அஜித் நடித்து வெளியிடும் அனைத்து படங்களையும் முதல் நாளே பார்த்து விடுவாராம் சிம்பு. சிம்பு தன்னுடைய படங்களில் அஜித்தின் தீவிர ரசிகன் என்பது போல் காட்சி வடிவமைக்கப் பட்டிருக்கும். ஆனால், சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் இனிமேல், நான் அஜித்தின் பெயரை பயன்படுத்தப்போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்
நடிகர் தனுஷ் கிசுகிசு குறித்து ஐஸ்வர்யா வாய் திறந்து பேசியுள்ளார்.அதில், என்னுடைய அப்பா ரஜினிகாந்த் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போது அவரை பத்தி வந்த கிசுகிசுக்களை என் அம்மா அமைதியாக இருந்து எதிர்கொண்டார். அது போலவே நான் இருக்க விரும்புகிறேன்.தனுஷை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மற்றும் நடிப்பு தான். ஒரு செக் கூட அவருக்கு நிரப்ப தெரியாது. அதனால் என் புருஷன் பத்தி எனக்கு தெரியும் என ஆவேசமாக பேசினார் ஐஸ்வர்யா
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கவிருக்கும் புதுப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கவுள்ளனர்.
விளை நிலத்தை வீட்டு மனையாக பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடையை நீக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்திரப்பதிவை முழுமையாக தடை செய்ய்யவில்லை அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி டெல்லிக்கு சென்றுள்ளார். மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலை இன்று மாலை தங்கமணி சந்திக்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதய் திட்டத்தில் சேருவது குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் சோதனை அடிப்படையில் டி.ஆர்.எஸ் முறையை அமல்படுத்த பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் காரில் எடுத்து வரப்பட்ட ரூ.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணமின்றி சாதிக் என்பவர் கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது தடைசெய்யப்பட்ட 5 பாக்கெட்டுகள் ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் என்ற இடத்தில் 15 நக்சலைட்டுகள் காவல்துறை தலைமை ஆய்வாளரின் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிண்டி சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். சிப்பெட் தலைமையகத்தை இடமாற்றுவது பிற்போக்கான முடிவு என அக்கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 900 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நீர் திறப்பு மேலும் 100 கன அடி அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் பட்டாசுக் கடையில் வெடி விபத்து ஏற்பட்டது குறித்து ஏடிஎஸ்பி மாடசாமி நேரில் ஆய்வு செய்து வருகிறார். சிவகாசி புறவழிச்சாலையில் உள்ள பட்டாசுக் கடையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர்