பாகிஸ்தானில் தவறிச் சென்று விட்ட பத்து வயது இந்திய சிறுமி கீதாவை, அந்நாடைச் சேர்ந்த இஸ்லாமிய தன்னார்வலர் கடந்த பத்து வருடங்களாக, வளர்த்திருக்கிறார். கீதாவுக்கு பேச்சு வராது: காது கேட்காது. ஆனாலும், அந்த சிறுமியின் பழக்க வழக்கங்களை வைத்து இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதை யூகித்து அவளை இந்துப் பெண்ணாகவே வளர்த்திருக்கிறார் அந்த பாகிஸ்தானிய இஸ்லாமியர். அவளது பெற்றோரை இந்தியாவில் தேடும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் கீதா பற்றிய தகவல்கள் பரவ… மோடி அரசு விழித்துக் கொண்டது. உடனே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, பாகிஸ்தான் அரசை தொடர்புகொண்டார்: . இருநாட்டின் தூதர்களும் பேசினார்கள்.
கீதாவின் பெற்றோர் என்று ஐந்து குடும்பங்கள் உரிமை கொண்டாட ஆரம்பித்ததால் சிக்கல் எழுந்தது. ஆனாலும், சிம்ப்பிளாக, டி.என்.ஏ பரிசோதனை செய்தாலே உண்மையான பெற்றோரை கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அதில் மோடி அரசு அக்கறை காட்டவில்லை.
அவசர அவசரமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட கீதாவை காப்பம் ஒன்றில் தங்க வைத்தது மத்திய அரசு.
இதற்கிடையே பிரதமர் மோடி, அமைச்சர் சுஷ்மா ஆகியோர் பளிச் பளிச் என போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். அவளுடன் சைகையில் பேசி, அப்ளாஸ் வாங்குகிறார்கள்.
ஊடகக்காரர்களும் “பாகிஸ்தான் சாப்பாடு உனக்கு சரிவந்துச்சா.. உன்னை மதம் மாத்த பாத்தாங்களா” என்றெல்லாம் “அதிமுக்கியமான: கேள்விகளை பொறுப்புணர்வோடு கேட்கிறார்கள்.
அதோடு, “இந்திய சிறுமியை காத்த மோடி” என்று வழக்கம்போல இமேஜை பூஸ்ட் செய்தாயிற்று. ஆனால் அந்த சிறுமியை பாகிஸ்தானில் அக்கறையுடன் வளர்த்த குடும்பத்தினருக்கு ஒரு மரியாதையும் தரப்படவில்லை. அதற்கு பதிலாக அந்த குடும்பத்துக்கு ஒரு கோடி தருகிறார் மோடி. அதையும் ஏழைகளுக்கே கொடுங்கள் என்று விட்டது அந்த குடும்பம். .
கீதாவை இந்தியாவுக்கு மீட்டு அழைத்து வந்தது மோடியின் சாதனையா? இது கடமை அல்லவா?
– மகேஷ்