the

சும்பொன் அய்யா பெயருக்கு பின்னால் இருக்கும் “தேவர்” என்றால் என்ன?

நம் பண்டைய தமிழ் மன்னர்களிடம் ஒரு மரபு,ஒரு பழக்கம் இருந்தது.மண்ணில் வாழ்ந்த பொழுது-செயற்கருஞ் செயல்களைச் செய்து விட்டு-இயற்கையோடு இரண்டறக் கலந்தவர்களை “தேவர்” அதாவது “கடவுளர்” என்று பொருள்படும்படி அழைத்து,அவர்களை நினைத்து பெருமைப்படுத்துவார்கள்.பிற்காலச் சோழ அரசை தோற்றுவித்த விஜயாலச் சோழனை “மார்பில் தொன்னூற்றாறு விழுப்புண்களைக் கொண்ட தேவர்” என்றும்,சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த பராந்தகச்சோழனை,”பொற்கூரை வேய்ந்த தேவர்” என்றும்,போரில் யானை மீது அமர்ந்து போரிட்டு-மார்பில் வேல் வாங்கி வீரமரணம் எய்திய -கன்டராதித்த சோழனை,”யானை மேல் துஞ்சிய தேவர்” என்றும்,இராஜஇராஜ சோழனின் தகப்பன் சுந்தர சோழனை-அவர் தன் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் கட்டிய பொன் மாளிகையில் இயற்கையானதால்-“பொன்மாளிகையில் துஞ்சிய தேவர்” என்றும் அழைத்துப் பெருமைப்படுத்திய வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறலாம்.இது போன்ற வரலாற்று உதாரணங்களை சொல்லிக் கொண்டே கூடப் போகலாம்.

அந்த வகையில் பசும்பொன்னில் பிறந்து,வளர்ந்து,தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்று வாழ்ந்து-மாவீரன் நேதாஜியுடன் இணைந்து தன்னலமில்லா மக்கள் பணியாற்றி-பசும்பொன்னிலேயே இயற்கையானதால்-வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்,வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க,பசும்பொன் உ.முத்து ராமலிங்கப் பெருமகனாருக்கு-“தேவர்” என்ற விகுதி சேர்த்து,”கடவுளர்” என்றுப் பொருள் படும் வகையில் சேர்த்து பெருமைபடுத்தப்படுகிறது.”தேவர்” என்பது சாதிப் பெயரேயல்ல.அது ஒரு பட்டம்.

இந்த அடிப்படையை உணராமல்-உலகமெங்கும் வாழும் ஒட்டு மொத்தத் தமிழர்களின்,பொது சொத்தான-பசும்பொன் அய்யாவை-ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைத்து ,அவரைத் தங்கள் சாதிக் கட்சித் தலைவராகக் காட்டி,வெட்டி வீண் ஜம்பம் அடித்துக் கொள்ள-எவருக்குமே அணு அளவு உரிமை கூட இல்லை.நாட்டிற்காக,மக்களுக்காக உழைத்தவர்களை தயவுசெய்து சாதிய வட்டத்திற்குள் அடைக்காதீர்கள்.இதற்காகவே ஏங்கித் தவிக்கும் சாக்கடைகள் பல இருக்கையில்-சந்தனத்தை சாக்கடையில் கலக்காதீர்கள்.

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் “தேவரின்” வாழ்க்கையைப் படித்ததால்-தயங்காமல் சொல்வேன்,

பெரியாரைப் போன்றே,பசும்பொன் உ.முத்துராமலிங்கத் “தேவர்” என் பாட்டனார் என்று…!

       ஜி. துரை மோகனராஜு https://www.facebook.com/durai.mohanraj.9?fref=ts