தர்மபுரியில் நடந்த  குறைதீர் கூட்டத்தில்  கலெக்டர் விவேகானந்தன் முன் துப்பாக்கியை நீட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன்.
இன்று தர்மபுரியில் நடந்த  குறைதீர் கூட்டத்தில்   கலெக்டர்  விவேகானந்தன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர்.  பொதுமக்கள் பலரும் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதிவந்து கலந்துகொண்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூட்டத்துக்கு வந்தார். அவரை முதல் வரிசையில் அமர வைத்தனர்.  கூட்டம் துவங்கியது.  அப்போது திடீரென எழுந்த முல்லை வேந்தன், தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து கலெக்டரை முன் நீட்டினார்.
302b9c227c50b8734e7b50eb908ed9ff_L
இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.  கலெக்டர் விவேகானந்தன், “உங்கள் பிரச்சினையை சொல்லுங்கள்.  துப்பாக்கியை உள்ளே வையுங்கள்” என்றார்.   ஆனாலும் துப்பாக்கியை  நீட்டியபடியே முல்லைவேந்தன், “இந்த துப்பாக்கிதான் எனக்கு பிரச்சினை.  அதனால் தான் துப்பாக்கியை எடுத்தேன்.  இதன் லைசென்ஸ் காலாவதியாகி எட்டு மாதம் ஆகிவிட்டது.  அப்போதே வ்லைசென்ஸ் புதுப்பிக்க பணம் கட்டி ரசீதும் வாங்கினேன்.  ஆனால் இதுவரை எனக்கு லைசென்ஸ் வழங்கப்படவில்லை.  லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்துள்ளதால்  என்னை போலீஸ் பிடித்து கைது செய்யலாம். அதனால் உங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன்”  என்றாக்ய
 அதற்கு மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன்> “விரைவில் உங்களுக்கு லைசென்ஸ் கிடைக்க ஆவண செய்கிறேன்” என்று உறுதி அளித்தார்.
இதையடுத்து நீட்டிய துப்பாக்கியை திரும்ப இடுப்பில் சொருகிக்கொண்டு நடையைக்கட்டினார் முல்லை வேந்தன்.
ஆனால் கூட்டத்தில் அவர் ஏற்படுத்திய பரபரப்பு அடங்க வெகுநேரம் ஆனது.

[youtube-feed feed=1]