ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களை குற்றம் சொல்லவில்லை!  சேரன் விளக்கம்

Must read

  ‘கன்னா பின்னா’  என்ற திரைப்படத்தின்  இசை  வெளியீட்டு  விழாவில்  இயக்குநர்  சேரன்  கலந்து கொண்டு பேசியபோது, “திருட்டு வி.சி.டிகளுக்கு காரணம் ஈழத்தமிழர்கள்தான் என்கிறார்கள். அவர்களுக்காக போராட்டங்கள் நடத்தியதை நினைத்தால் அருவெறுப்பாக உள்ளது” என்றார்.
இதற்கு ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்,  இயக்குநர் சேரன்,  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Cheran1604_01
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன் யாரைப்பற்றி பேசியிருப்பேன் என புரிந்திருக்கும்… என்னைத்தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது…. இதுவரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது…  ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களை அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை..
அப்போ எங்களோட வாழ்க்கை பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா… உலகெங்கும் நண்பர்களை கொண்டு (அவர்களும் இலங்கைத் தமிழர்கள்தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்றபோது அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்…
ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு…
நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும்.. அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்க மாட்டார்கள்…”
இவ்வாறு சேரன் தனது  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article