ராய்பூர்:
த்திஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்னர்.
சதிஸ்கர் மாநிலத்தில் கடந்த 27ந்தேதி முதல் நக்சலைட்டுகளை தீவிரமாக வேட்டையும் பணியை  பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே வாகன சோதனையின்போது, வெடிகுண்டுகளுடன் வாகனத்தில் வந்த இரண்டு நக்சலைட்டுகள் கைது செய்யப்ப்டடனர்.

நேற்று ஒடிசா மாநில எல்லை பகுதியான சந்தோமேடா கிராமத்தில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  சந்தோமேடா கிராமத்தில் நக்சலைட்களின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில போலீசாருடன் இணைந்து நக்சலைட்டுகளை வேட்டையாடியதாக பாஸ்தர் பிராந்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்ஆர்பி கல்லூரி கூறினார்.
மேலும் நக்சலைட்டுகளிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களாக வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது நக்சலைட்டுகள் கண்ணி வெடிகுண்டுகளையும் வெடிக்கசெய்தனர் என்றார்.
தொடர்ந்து வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்றார்.