தஞ்சை:
தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ளது சாலியமங்கலம் கிராமம். கடந்த 31ம் தேதி, இந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள தோட்டத்தில், நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறை விசாரணை செய்ததில், இதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் கலைச்செல்வி என்பது தெரியவந்தது.

கலைச்செல்வியின் உடலில் கொடூரமான காயங்கள் இருந்துள்ளது. அவரது வாயில் கிழிந்த உள்ளாடைகளை திணிக்கப்பட்டு இருந்தது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது. . மேலும், சாகும் வரை தாக்கியுள்ளனர் என்றும் புகார் எழுந்தது.
இதையடுத்துக் கொலைக்குக் காரணமான ராஜா மற்றும் குமார் ஆகியோரை காவல்துறை கைது செய்தது.
Patrikai.com official YouTube Channel