சட்ட சபையில் "சாரி" கேட்டார்  சட்ட மந்திரி சண்முகம்

Must read

சென்னை: 
ட்டசபை விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை மரியாதையின்றி பேசியதற்கு அமைச்சர் மன்னிப்பு கோரினார்.
CVShanmugam1
அவையில், தி.மு.க., உறுப்பினர்  ரவிச்சந்திரனின் கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பதில் அளித்துக்கொண்டு இருந்தார். அப்போது,  உறுப்பினர் சேகர்பாபு குறுக்கிட்டு ஏதோ கூறியதால், பேச்சு தடைப்பட்டது.
இதன் காரணமாக  அமைச்சர், ”உங்க உறுப்பினர் என்ன பேசினாலும் கேக்கணுமா; உன்ன பாத்தவன்தான், வேற எங்கேயாச்சும்…” என, ஒருமையில் கூறினார்.
அடுத்த விவாதமான,  பெண் வன்கொடுமைக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கை பற்றி  அமைச்சர் பேசிய போது, தி.மு.க., உறுப்பினர்  ரங்கநாதன்  ஏதோ கூறினார்.
இதன் காரணமாக கோபமடைந்த அமைச்சர்  சண்முகம், ”நான் சொல்லட்டா, நான் சொல்லட்டா… கனிமொழி,” என, கோபமாக கூறினார்.
இதுபோல், காங்., உறுப்பினர் விஜயதாரணி தொடர்ந்து இடையூறு செய்த போதும், அவரிடமும் ஒருமையில் ஏதோ கூறினார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, சபாநாயகர் தனபால், ”நீங்கள் என் அனுமதியின்றி குறுக்கிட்டு பேசுவது தவறு,” என்iறார்.
இதையடுத்து, அமைச்சர் சண்முகம், ”நான் யாரையும் புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை;  அப்படி இருந்திருந்தால், ‘சாரி’. அது என் நோக்கமல்ல,” என்று எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கோரினார்.

More articles

Latest article