சென்னை:
ராஜீவ் கொலை வழக்கு கைதி நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட மனு முடித்து வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு உதவியதாக நளினி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில மனு செய்திருந்தார்.
இந்த மனு மீது முடிவு எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆனால், தமிழக அரசோ, வழக்கு சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் இருப்பதால், நளினியை விடுதலை செய்ய இயலாது என்று கூறியது.
இதன் காரணமாக நளினியை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.
Patrikai.com official YouTube Channel