தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவை பாரம்பரியமிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடம்பெற்றுள்ளது.

இதனால் இங்கு இடநெருக்கடி நிலவுவதாக பல தசாப்தங்களாக புகார் கூறப்பட்டு வருகிறது.

இதையடுத்து 2006 – 11 காலகட்டத்தில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி முயற்சிகள் மேற்கொண்டார்.

இந்த சட்டமன்ற வளாகம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து 2011ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா அந்த சட்டமன்ற வளாகத்தை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றினார்.

இதனால், தமிழக சட்டமன்றம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தொடரவேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது இதே இடநெருக்கடி பிரச்சனையை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு கையிலெடுத்துள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் கடந்த 2025ல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

இதன் பணிகள் 50% முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த மாநாட்டு வளாகம் திறக்கப்பட இருந்தது.

இந்நிலையில், தவெக அரசு இந்த கலைஞர் பன்னாட்டு மையத்தை தமிழ்நாட்டின் புதிய சட்டப்பேரவையாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

[youtube-feed feed=1]