திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் விளக்கேற்ற அனுமதி கோரி இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ரூ.50,000 அபராதத்தை ரூ.5,000 ஆகக் குறைத்து உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற அனுமதி கோரி இந்து தர்ம பரிஷத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 9-ம் தேதி தள்ளுபடி செய்ததுடன், அரசியல் நோக்கத்திற்காக இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகக் கண்டனம் தெரிவித்து ரூ.50,000 அபராதமும் விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அரவிந்த் குமார் மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்தது. இருப்பினும், விதிக்கப்பட்ட அபராதம் அதிகமாக இருப்பதாகக் கருதி அதை ரூ.5,000 ஆகக் குறைத்தது.
மலையில் விளக்கேற்றுவதை தடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பிற மதத்தினருக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. எனினும், அந்தக் கோரிக்கைகளை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
[youtube-feed feed=1]