சென்னை:  தமிழ்நாட்டில், ‘டெட்’ தேர்வு தேர்ச்சிக்கான  அவகாசம் 2028 ஆகஸ்ட் வரை நீட்டிப்பு செய்து  உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.

டெட் தேர்வுக்கு எதிரான 65-க்கும் மேற்பட்ட மறுஆய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், பணியில் தொடரும் அல்லது பதவி உயர்வு பெறும் அனைத்துப் பணிபுரியும் மற்றும் ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31, 2028 வரை நீட்டித்து நீதிமன்றம் நிவாரணம் வழங்கியுள்ளது.

2025 ஆம் ஆண்டு உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, TET தொடர்பான பகுதியை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு மாநிலங்கள், ஆசிரியர் சங்கங்கள்/அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட ஆசிரியர்களால் சுமார் 70 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ,  இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  TET கட்டாய விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியதுடன்,  ,பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்று மீண்டும் உறுதி செய்தது.

“மறுஆய்வு மனுதாரர்களாக இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள், அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என்பதால், நாங்கள் அவர்கள் மீது அனுதாபம் கொள்கிறோம். இருப்பினும், உணரப்பட்ட பாதுகாப்பின்மை உணர்வு, இந்த நீதிமன்றம் இந்த விஷயத்தை மீண்டும் பரிசீலிக்கப் போதுமான காரணம் அல்ல.” ஆனால்,   இதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31, 2028 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதையடத்து,   தனது 2025 ஆம் ஆண்டு தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில்  உள்ள பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2025ம் ஆண்டு  செப்.1-ம் தேதி உத்தரவிட்டது. அதில், 5 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள ஆசிரியருக்கு மட்டும் விலக்கு தரப்பட்டது.  மற்றவர்கள் 2 ஆண்டுகளில் ‘டெட்’தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில் கட்டாய ஓய்வு வழங்கும்படி தெரிவித்திருந்தது.மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதற்கு எதிர்ப்புதெரிவித்தும், கால அவகாசம் கோரியும் ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம்,  ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற ஆகஸ்ட் 2028ஆம் ஆண்டு வரை அவகாசம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் பணி நலனைப் பாதுகாக்க, ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு 2026ஆம் ஆண்டு 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. 2026ஆம் ஆண்டில் ஜனவரி 2026, ஜூலை 2026, மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த அரசு, டிஆர்பிக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]