டெல்லி:  தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவி ஏற்று 15 நாட்கள் ஆன நலையில், பிரதமர் மோடியை நாளை (மே 27) சந்திக்க உள்ளார். இதற்காக நாளை காலை விஜய் டெல்லி செல்கிறார்.

பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து விட்டு தாயகம் திரும்பிய நிலையில் பல்வேறு பணிகளில் தீவிரமாக செயலாற்றி வருகிறார். அதனால், முதல்வர் விஜயை சந்திப்பில் நேரம் கிடைக்கத நிலை ஏற்பட்டது.   இதைத்தொடர்ந்து நாளை தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல்கள்  வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி,  கடந்த மே 15 முதல் 20 வரை, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.  அவரது, சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமான இத்தாலியில், ​​பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 21ந்தேதி தாயகம் திரும்பினார்.  அதைத்தொடர்ந்து 22ந்தேதி முதல்வர் விஜய் சந்திப்பார் என தகவல்கள் பரவின.

ஆனால், பிரதமர் பிசியாக இருந்ததால், அவரை சந்திப்பதில்தாமதம் எற்பட்டது. இதையடுத்து, முதல்வர் விஜய் சந்திக்க நாளை (மே 27) நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாககூறப்படுகிறது. இதையடுத்து,  பிரதமர் மோடியை  முதல்வர் விஜய் நாளை (மே 27) டெல்லியில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்த உள்துறை அமைச்சர், நிதியமைச்சர்உள்பட பலரை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, தமிழக வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என விஜய் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்தின் முக்கிய திட்டங்கள், உட்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து,  காங்கிரஸ் தலைவர்கள்,  சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் சந்திப்பு நடைபெறலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]