சென்னை:  தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் குதிரை பேரத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலியாகி வருகின்றனர். ஏற்கனவே 3 அதிமுக எம்எல்ஏக்கள்  தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு,  தவெகவில் ஐக்கியமாகி உள்ள நிலையில், இன்று  அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ   இசக்கி சுப்பையாவும்  தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது அதிமுகவினருக்கு பேரிடியாக விழுந்துள்ளது.  இதன் காரணமாக, அதிமுகவின் மற்றொரு அணியாக வேலுமணி முகாமின் பலம் 16 ஆகக் குறைந்துள்ளது.

‘சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில்  அதிமுகவுக்கு 47 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) உள்ளனர்.இதில் அதிகார மோதல் காரணமாக முன்னாள் அமைச்சர் சிவி சண்மும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் பாதிபேர் வெளியேறி தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இவர்கள்  அதிகார போதையில், சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், தவெக அவர்களை கண்டுகொள்ளாத நிலையில், தற்போது,  கட்சி தாவல் தடை சட்டப்படி அவர்களின் பதவி பறிபோகும் நிலை உருவாகி உள்ளது.

இதன் காரணமாக சிவி சண்முகம் அணியில் இருந்த சில அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பா அணிக்கு திரும்பிய நிலையில்,  மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை  தொகுகிதளின் அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அடுத்த 10 நிமிடங்களில் தவெகவில் இணைந்து உறுப்பினர் அட்டை பெற்றனர். இது விவாதப்பொருளாக மாறி உள்ள நிலையில்,   இன்று 4-வது நபராக அம்பாசமுத்திரம் தொகுதி எமஎல்ஏ  இசக்கி சுப்பையாவும்  அதிமுகவில் இருந்து வெளியேறி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது  அதிமுக தலைமைக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இசக்கி சுப்பையா, இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து, சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலரை நேரில் சந்தித்து தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து அவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இசக்கி சுப்பையா 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். 2016-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் போது, டி.டி.வி. தினகரன் பக்கமிருந்தவர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) தலைமை அலுவலகக் கட்டிடத்தையே இவர்தான் வழங்கினார். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்து, 2021 மற்றும் தற்போதைய 2026 சட்டமன்றத் தேர்தல்களில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கட்சியின் முக்கிய தூணாக விளங்கி வந்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமைந்த சூழலில், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டத்தில், எடப்பாடி பழனிசாமி யின் உத்தரவை மீறி, எஸ்பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்புக்கு ஆதரவாகவும், தமிழக வெற்றி கழகத்தின் புதிய அரசுக்கு ஆதரவாகவும் இசக்கி சுப்பையா வாக்களித்திருந்தார். ஆனால், கட்சி தாவல் தடை சட்டப்படி அவரது பதவி பறிபோகும் நிலை உருவாகி உள்ள நிலையில், இன்று தனது  சட்டமன்ற உறுப்பினராக இசக்கி சுப்பையா இன்று ராஜினாமா செய்துள்ளார்.  இன்று பிற்பகல்  தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் அடுத்தடுத்து தவெக நோக்கி நகரக்கூடும் என்பதால் தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்த பட்சத்தில், சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 44-லிருந்து 43 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]