சென்ன: கடந்த pjKf ஆட்சியில் மின்சார டெண்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றுது என ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் புகார் அளித்துள்ளதாக மின்துறை அமைச்சர் சிடி நிர்மல்குமார் கூறினார். அதனால், மின்வாரிய ஒப்பந்தங்களில் புரோக்கர் முறை ஒழிக்கப்படும் என உறுதி தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் மின்வாரியத்துடன் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள், மின் உபகரணங்கள் விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் கொள்முதல் செய்வோர் ஆகியோருடன் எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கலந்துரையாடினார்.

அப்போது, “ஒப்பந்தங்களில் பேக்கிங் சிஸ்டம் முறையில் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பேக்கிங் சிஸ்டத்தை மாற்றம் செய்ய வேண்டும்” என கோரிக்கை பல ஒப்பந்ததாரர்கள் வைத்தனர்.
யுனிவர்சல் கேபிள் லிமிடெட் நிறுவன பிரதிநிதி, “50 சதவீதம் கேபிள்களை 90 நாட்கள் வேலிடிட்டியில் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் பணம் 90 நாட்களில் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்படி கொடுப்பதில்லை. அதனை கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும் சில ஒப்பந்ததாரர்கள், “ரூ.75 கோடி மதிப்பிலான முதலீடு செய்வதற்கு ஆர்வத்துடன் வந்துள்ளேன். அமைச்சர் ஆதரவு வழங்க வேண்டும். ஒவ்வொரு பவர் பிளான்ட்டிலும் ஒரே நிறுவனமே ஆதிக்கம் செலுத்துகிறது. இதனை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். 6 மாத பணிக்கு 3 வருடமாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்.
பணிக்கான காலமும் தாமதமாகிறது. கம்பங்களை தயார் செய்யும் நிறுவனங்களுக்கு தேவையான எம் சாண்ட் உள்ளிட்டவை 45 நாளில் பணம் கேட்கிறார்கள். வழங்காத நிலையில் அபாரத பணமும் கேட்கின்றனர். எனவே பணி முடிந்த பின்னர் பணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்.
மேலும் கடந்த காலங்களில் டெண்டர் பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட நபரை பார்க்க வேண்டியது இருந்தது. அவர் கூறும் நபர்களுக்குத் தான் டெண்டர் வழங்கப்பட்டன. ஒளிவு மறைவு இல்லாமல் டெண்டர் வழங்க வேண்டும். அதற்கான பணத்தை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிளித்த அமைச்சர் நிர்மல் குமார், “கடந்த ஒரு வாரத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். டெண்டர் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்து புதிய கொள்கை கொண்டு வந்தால் இந்த பிரச்சனைகளை களையலாம். மின் வாரிய ஒப்பந்தங்களில் புரோக்கர் முறை ஒழிக்கப்படும். அனைவருக்கும் இந்த அரசின் ஒத்துழைப்பு வழங்கப்படும்.
மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த தனி நபருக்குமானது அல்ல. சிறு, குறு தொழில் முனைவோருக்கும் சேர்ந்ததே. அனைவருக்கும் ஒளிவு மறைவின்றி வாய்ப்பு வழங்கப்படும். மின்கம்பங்கள் தயார் செய்வதற்கு 13 பேர் டெண்டர் போடப்பட்டதை நிறுத்தி வைத்துள்ளோம். ஏனெனில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும். இனிமேல் எந்தவித இடையூறும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம்” என்றார்.

[youtube-feed feed=1]